தொடக்க கல்வி துறையில் இதுவரை வழங்கப்படாமல் இருந்த தன் பங்களிப்பு ஓய்வு ஊதிய திட்டத்தில் (CPS) 01.04.2003 பின் நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கும் (தொடக்க கல்வி துறையில் பணியாற்றும்) அலுவலர்களுக்கு ஒப்புகைசீட்டு (A/C SLIP) வழங்கப்படாமல் இருந்தது, இதனை மதிப்பிற்குரிய தொடக்க கல்வி இயக்குனர் கவனத்திற்கு நமது மாநில பொறுப்பாளர்கள் கொண்டு சென்றனர். இயக்குனர் அவர்கள் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு ஒப்புகை சீட்டு வழங்க 11.09.2014 உத்தரவிட்டார்.
இதன் மூலம் அனைத்து கருவுலம் வழியாக உதவி தொடக்க கல்வி அலுலகங்களுக்கு ஒப்புகைசீட்டு குறுந்தகடு (CD) மூலம் அனுப்பப்பட்டது ,இது கிடைக்கப்பெற்று 3 மாதங்களுக்குள் விடுபட்ட பதிவுகள் ஏதேனும் இருப்பின் அல்லது சில நபர்கள் மொத்தமாக பதிவுகள் இல்லை என்றாலும் உடனே கருவூலம் மூலம் தகவல் தெரிவிக்க வேண்டும். அக்காலக்கெடு வரும் டிசம்பர் -10 ம் தேதி முடிவடைகிறது அதன் பின் இப்போது உள்ள பதிவுகள் சரியாக உள்ளது என்று அரசால் ஏற்றுக்கொள்ள படும் .தற்போது சில ஒன்றியங்களில் ஒப்புகை சீட்டு வழங்கப்பட்டுள்ளது, பல ஒன்றியங்களில் இதுகுறித்து எந்தவொரு தகவலும் தெரிவிக்காமல் ஒப்புகை சீட்டு வழங்கப்பட்டாமல் உள்ளன.இது உடனடியாக தொடக்க கல்வி இயக்குனர் கவனத்திற்கு கொண்டு செல்ல இருக்கிறது நமது TNGTF.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக