லேபிள்கள்

21.9.13

தொடக்கக் கல்வி - தமிழ்நாட்டிலுள்ள பள்ளிகளில் உள்ள வகுப்புகளை இணைத்து ஒருங்கிணைந்து பயிலும் திட்டம் சார்பாக பள்ளிகளை தேர்வு செய்தல் குறித்த இயக்குநரின் அறிவுரைகள்

SSLC / PLUS 2 HALLTICKET ஆன்லைனில் பதிவிறக்கம் செய்ய இயலாத தனித்தேர்வர்கள் நாளை விண்ணப்பத்தினை சமர்பித்த DEO அலுவலகத்தில் நேரில் தொடர்பு கொள்ள உத்தரவு

ஐகோர்ட் தீர்ப்பை அமல்படுத்த ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்

சென்னை, உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி, 70 பேரை, பதிவு மூப்பு அடிப்படையில், பட்டதாரி ஆசிரியராக பணி நியமனம் செய்ய,தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.சங்கத்தின் தலைவர் அன்பரசு,நிருபர்களிடம் கூறியதாவது: முந்தைய தி.மு.க., ஆட்சியில், பதிவு மூப்பு அடிப்படையில், ஆசிரியர் நியமனம் செய்யப்பட்டனர். 

தமிழ்நாட்டில் 50 நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிக் கூடங்களாக தரம் உயர்வு: அரசு ஆணை வெளியீடு

சட்டசபையில் தமிழக முதல்வர் அறிவித்ததற்கேற்ப தமிழ்நாட்டில் 50 நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிக் கூடங்களாக தரம் உயர்த்தி அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக, தமிழக அரசு பிறப்பித்துள்ள ஆணை வருமாறு:-
தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதி 110-ன் கீழ் முதல்-அமைச்சரால் 15-5-2013 அன்று, உயர்நிலைப் பள்ளிகளை பொறுத்தவரையில் 5 கிலோ மீட்டர் தொலைவிற்குள் ஓர் உயர்நிலைப் பள்ளி ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதன் அடிப்படையில், மத்திய அரசால் நிதியுதவி அளிக்கப்படாத நிலையிலும், மாணவர்களின் நலன் கருதி, மாநில நிதியில் இருந்து 2013-2014-ம் கல்வி ஆண்டில் 50 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

பதவி உயர்வில் மாற்றாந்தாய் போக்குடன் புறக்கணிக்கப்படும் தொடக்கக் கல்வித் துறை ஆசிரியர்கள்.

1. பள்ளிக் கல்வித் துறையில் பணியில் சேரும் பட்டதாரி ஆசிரியர்கள் பணிமூப்பு மற்றும் உயர்கல்வித் தகுதியின் அடிப்படையில் உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் / முதுகலை பட்டதாரி ஆசிரியர் / வட்டார வளமைய மேற்பார்வையாளர், மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் / மாவட்ட கல்வி அலுவலர் / மாவட்ட தொடக்க கல்வி அலுவலர், முதன்மைக் கல்வி அலுவலர் / இனை இயக்குனர், இயக்குனர் போன்ற பல உயர் பதவிகளுக்கு பதவி உயர்வு பெற வழி வகை செய்யப்பட்டுள்ளது. ஆனால், அதே கல்வித் தகுதியுடன் ஒரே தேர்வு முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு தொடக்கக் கல்வித் துறையில் பணியில் சேரும் பட்டதாரி ஆசிரியர்களின் பதவி உயர்வு வாய்ப்பானது கானல்நீராக உள்ளது.

நேற்று புதிய பென்ஷன் மசோதா திட்டத்திற்கு குடியரசு தலைவர் ஒப்புதல்

நேற்று புதிய பென்ஷன் மசோதா திட்டத்திற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். பாராளுமன்றத்தில் புதிய பென்ஷன் மசோதா வந்து சட்டம் நிறைவேற்றப்பட்டது.அந்த மசோதாவிருக்கு மாண்புமிகு நமது குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

பொதுத்தேர்வு ,செப்டம்பர் 2013 நடைபெற உள்ள மேல் நிலை /இடை நிலை துணை தேர்வு மையங்களில் முதன்மைக் கண்காணிப்பாளர் கடைபிடிக்க வேண்டிய அறிவுரைகள்

புதிய தொழில் வரி அடுத்தாண்டு ஏப்ரல் முதல் அமல் ......புதிய தொழில் வரி விவரம் ........30% வரை உயர்வு


பத்தாம் வகுப்பு தேர்வுகளுக்கும் "பார்கோடிங்" முறை அமல்: முறைகேடுகள் நடப்பதற்கு வாய்ப்பே இல்லை

பிளஸ் 2 தேர்வுகளில், முக்கிய பாடங்களுக்கு மட்டும், "டம்மி எண்" வழங்கி விடைத்தாள் திருத்தப்பட்டு வந்த நிலையை மாற்றி, பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வில், அனைத்து பாட தேர்வுகளுக்கும், "பார்கோடிங்" முறை அமல்படுத்தப்பட உள்ளது.

தொடக்கக் கல்வி- பள்ளிகள் மற்றும் வகுப்பறையில் செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க இயக்குநர் உத்தரவு


தொடக்க கல்வி - 24.9.13 ல் உதவித் தொடக்க கல்வி அலுவலர்களுக்கான ஒருநாள் பணிமனை கூட்டம்


20.9.13

அனைவருக்கும் கல்வித் திட்ட நிதியில் ஊதியம் பெறும் பெரும்பாலான ஆசிரியர்களின் சம்பளப் பிரச்னை தீர்ந்தது

தொடக்க கல்வித் துறையில் பணியாற்றும், 3,565 இடைநிலை ஆசிரியர் மற்றும் 1,581 பட்டதாரி ஆசிரியருக்கான பணியிடங்களை, வரும் டிசம்பர் வரை நீட்டிப்பு செய்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. "தினமலர்" நாளிதழ் செய்தி எதிரொலியாக, 5,146 ஆசிரியர்களும், எந்த சிக்கலும் இன்றி, சம்பளம் பெறுவது, உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் திரவ இயக்க அமைப்பு மையம் மகேந்திரகிரி சார்பாக அக்டோபர் 04.10.2013 முதல் 10.10.2013 வரை உலக விண்வெளி வாரத்தை முன்னிட்டு ( World Space Week ) உயர்நிலை /மேல் நிலை பள்ளி மாணவர்களுக்கு பேச்சு போட்டி மற்றும் கட்டுரை போட்டி நடத்துதல் சார்ந்து

அரசு தேர்வு இயக்ககத்தில் 28.09.2013 அன்று நடைபெற்ற கூட்டத்தின் நடவடிக்கைகள் விவரம் -(DGE -MEETING MINUTES )

மாவட்டக்கல்வி அலுவலரின் கண்காணிப்பாளர்களுக்கு கல்வித்துறை செயலர் /இயக்குநர் மற்றும் இணை இயக்குநர்கள் அவர்களால் வழங்கப்பட்ட அறிவுரைகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்விற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

மத்திய அரசு, அதன் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஜூலை 1ந் தேதி முதல் 10% அகவிலைப்படி உயர்வு அறிவித்துள்ளது. இன்றைய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து அடுத்த வாரத்தில் தமிழக அரசும் அகவிலைப்படி உயர்விற்கான அறிவிப்பு வெளியிடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தவிப்பில் ஆசிரியர்கள் : மனது வைப்பாரா செயலர்.


பிளஸ் 2 மறு மதிப்பீட்டு திட்டத்தில் முறைகேடு நடந்ததா.....விடைத்தாளை மீண்டும் ஆய்வு செய்கிறது தேர்வுத்துறை.


பள்ளிகளுக்கு மேஜை,நாற்காலி : எம்.பி.,க்கள் நிதி ஒதுக்கலாம்.


625 கணினி ஆசிரியர் பணி நீக்கம் செல்லும்: உயர்நீதிமன்றம் தீர்ப்பு!


முதுகலை ஆசிரியர் பட்டியல் எப்போது?


19.9.13

செப்டம்பர் 27, 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 முதன்மைத் தேர்வு அக்டோபர் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குருப் 1 தேர்வின் முதன்மை தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 27, 28, 29 தேதிகளில் நடைபெறவிருந்த குரூப் 1 முதன்மை தேர்வு, அக்டோபர் 25, 26, மற்றும் 27ஆம் தேதிகளில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

தகுதி பெறாத கணினி ஆசிரியர்களை பணி நீக்கம் செய்த அரசின் உத்தரவு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

அண்மையில் நீதிமன்ற உத்தரவின்படி 652 கணினி ஆசிரியர்களை நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

பள்ளிக்கல்வித்துறை - சுகாதார நடவடிக்கைகள் - டெங்கு மற்றும் பிற வைரஸ் காய்ச்சல் குறித்த தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள இயக்குநர் உத்தரவு

10ம் வகுப்பு, 12ம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவர் விவரம் 23ம் தேதி முதல் இணையதளத்தில் பதிவு

வரும் மார்ச், ஏப்ரலில் பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவியரின் விவரங்களை, வரும், 23ம் தேதி முதல், தேர்வுத் துறை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என, தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.

பல்வேறு சீர்திருத்தம் : தேர்வுத் துறை இயக்குனராக, தேவராஜன் பதவி ஏற்றதில் இருந்து, பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, பொதுத் தேர்வுக்குப் பின், தேர்வு விவரங்களிலும், பெயர்களிலும் பிழைகள்

23ம் தேதி பிளஸ் 2 தனி தேர்வு : இன்று முதல் "ஹால் டிக்கெட்

'பிளஸ் 2 தனி தேர்வு, வரும், 23ம் தேதி துவங்குகிறது. மாநிலம் முழுவதும், 130 மையங்களில் நடக்கும் தேர்வை, 40 ஆயிரம் மாணவர் எழுதுகின்றனர். தொடர்ந்து, அக்., 5ம் தேதி வரை, பிளஸ் 2 தேர்வு நடக்கிறது. 10ம் வகுப்பு தனி தேர்வும், 23ம் தேதி துவங்குகிறது.