லேபிள்கள்

15.9.13

எம்.பி.பி.எஸ்.: செப்.,20 முதல் இறுதிக் கட்ட கலந்தாய்வு

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்க இறுதிக் கட்ட கலந்தாய்வு செப்.,20ம் தேதி தொடங்குகிறது.
எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்க இதுவரை 2 கட்ட கலந்தாய்வு சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி அரங்கில் நடத்தப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்ட கலந்தாய்வுக்குப் பிறகு அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் சேராததால் ஏற்பட்டுள்ள காலியிடங்கள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களில் ஏற்பட்டுள்ள காலியிடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டிலிருந்து தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு மீண்டும் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 60 எம்.பி.பி.எஸ். காலியிடங்கள், சென்னை பாரிமுனை அரசு பல் மருத்துவக் கல்லூரியில் ஏற்பட்டுள்ள பி.டி.எஸ். காலியிடங்கள், சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். காலியிடங்கள் ஆகியவற்றை நிரப்ப இறுதிக் கட்ட கலந்தாய்வு நடத்தப்படுகிறது.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி அரங்கில் இறுதிக் கட்ட கலந்தாய்வு வரும் 20-ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து 23-ஆம் தேதி வரை நான்கு நாள்கள் நடைபெறும் என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழுச் செயலர் டாக்டர் ஆர்.ஜி.சுகுமார் தெரிவித்தார்.

எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். இறுதிக் கட்ட கலந்தாய்வு குறித்த விவரங்கள் சுகாதாரத் துறையின் இணையதளம் www.tnhealth.org  செப்.,16 வெளியிடப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக