லேபிள்கள்

2.8.13

பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி உண்ணாவிரதம்

ஊதிய குழு முரண்பாடுகளை களைதல், பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல், மத்திய அரசுக்கு இணையாக அனைத்துப் படிகளையும் வழங்குதல், அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைத்தல், நிரந்தர ஊதிய விகிதம் பெறாத பணியாளர்களுக்கு பணி

நிரந்தரம் மற்றும் காலமுறை ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட 25 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம் சார்பில் சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகில் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் - மாண்புமிகு முதல்வரின் 10.04.2011 அன்றைய உறுதி - பழைய நாளிதழ் செய்தி

பள்ளிக்கல்வி - முப்பருவத் திட்டம் - 2013-14 ஆம் கல்வியாண்டில் 9 ஆம் வகுப்பிற்கான முப்பருவ முறை மற்றும் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு, முதல் பருவதத்திற்க்கான வாரந்திர பாடத்திட்டம் பள்ளிகளில் செயல்படுத்த உத்தரவு.

1.8.13

DSE - PAY CONTINUATION FOR 900 PG TEACHERS SANCTIONED AS PER GO.137 - PAY CERTIFICATE FOR 3 MONTHS FROM 08.06.2013


இரட்டைப்பட்ட வழக்கு விசாரணை வருகிற ஆகஸ்ட் 6ந் தேதிக்கு ஒத்தி வைப்பு

சென்னை உயர் நீதிமன்றத்தில் மாண்புமிகு தலைமை நீதியரசர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்த இரட்டைப்பட்டம் தொடர்பான வழக்கு எதிர்தரப்பு வழக்குரைஞர்கள் வேண்டுதலுக்கிணங்க வருகிற 06.08.2013 செவ்வாய் கிழமை ஒத்திவைக்கப்பட்டுள்ளது

இடைநிலை ஆசிரியர்களின் பணியிடங்களை தரம் உயர்த்தி பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்துவது அரசின் கொள்கை முடிவிற்குட்ப்பட்டவை இணை இயக்குநர் தகவல்

பட்டதாரி ஆசிரியர்களுக்கு எம்.பில் / பி.எச்.டி., ஊக்க ஊதியம் தொடர்பாக தலைமை ஆசிரியர்கள் பிறபித்த Recovery ஆணைக்கு உயர்நீதிமன்ற கிளை இடைக்கால் தடை விதித்து உத்தரவு.

தொடக்க / பள்ளிக்கல்வித்துறையில் உள்ள நடுநிலை / உயர் / மேல்நிலைப் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு எம்.பில்., / பி.எச்.டி படித்தவர்களுக்கு இரண்டாம் ஊக்க ஊதியம் வழங்க அரசாணை எண்.18 நாள்.18.01.2013 மூலம் தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து பட்டதாரி ஆசிரியர்கள் ஊக்க ஊதியம் பெற்று வந்தனர். பிறகு தமிழக அரசு 17.07.2013 அன்று இவ்வரசாணை தொடர்பான தெளிவுரையில் அரசாணை எண்.18 வழங்கிய நாள் முதல் ஊக்கஊதியம் அனுமதிக்கலாம் என்று தெளிவுரை வழங்கியது.

பள்ளிக்கல்வி இயக்குனராக ராமேஸ்வர முருகன் பதவியேற்பு

பள்ளிக்கல்வி இயக்குனராக, ராமேஸ்வர முருகன், நேற்று பதவியேற்றார். பள்ளிக்கல்வி அமைச்சரின் கீழ், பல்வேறு துறைகள் இயங்கினாலும், தலைமைத் துறையாக, பள்ளிக் கல்வித் துறை விளங்குகிறது. நேற்று முன்தினம், ஏழு இயக்குனர்கள் மாற்றப்பட்டபோது, பள்ளிக்கல்வி இயக்குனர் தேவராஜனும் மாற்றப்பட்டு, தேர்வுத் துறை இயக்குனராக நியமிக்கப்பட்டார்.

டி.இ.டி., தேர்வர்களுக்கு, வரும், 5ம் தேதி, டி.ஆர்.பி., இணைய தளத்தில், "ஹால் டிக்கெட்' வெளியிடப்படும்' -

 டி.ஆர்.பி.,வரும், 17,18 தேதிகளில், டி..டி., தேர்வு நடக்கிறது. 17ம் தேதி நடக்கும், முதல் தாள் தேர்வை (இடைநிலை ஆசிரியருக்கானது), 2,68,160 பேரும், 18ம் தேதி நடக்கும், இரண்டாம் தாள் தேர்வை (பட்டதாரி ஆசிரியருக்கானது), 4,11,634 பேரும் எழுதுகின்றனர்.

பிறந்த தேதி /தந்தை பெயர் /பெயர் /முகப்பெழுத்து மற்றும் சாதி திருத்தும் கூறுதல் அறிவுரைகள் சார்ந்து

31.7.13

அரசு ஊழியர்களுக்கான ஜூலை 2013-க்கான அகவிலைப்படி உயர்வு 10 சதவீதம் உறுதி

ஜூன் 2013 மாதத்தின் மத்திய தொழிலாளர் துறை மூலம் வெளியிட்ட இந்திய நுகர்வோர் குறியீட்டு எண் (AICPIN) அத்தியாவசிய பொருட்கள் விலை ஏற்றத்தின் காரணமாக

1 முதல் 4ஆம் வகுப்பில் 100க்கு மேல் உள்ள மாணவர்கள் எண்ணிக்கைக்கேற்ப கூடுதல் SABL அட்டைகள் வழங்க விவரம் கோரப்பட்டுள்ளது.

அரசு / அரசு நிதியதவி பெறும் தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில்பல பள்ளிகள் 1 முதல் 4 வகுப்புகளில் 100க்கு மேல் மாணவர்கள் எண்ணிக்கை உள்ளதெனவும், அப்பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள 1Set கற்றல் அட்டைகள் கொண்டு கற்றல் நிகழ்வுகள் நேர்த்தியாக நடைபெற இயலவில்லை என்றும், 
எனவே அவ்வாறு கூடுதல் மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப கூடுதல் அட்டைகள் வழங்க விவரம் கோரி அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட விவரங்கள மாவட்ட வாரியாக 05.08.2013க்குள் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.