லேபிள்கள்

28.7.13

உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி அரசு பள்ளிகளில் பணியாற்றும் 652 ஆசிரியர்கள் பணி நீக்கம்

உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி, போதிய கல்வித் தகுதி இல்லாததால், அரசு இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. தமிழக அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றி வரும் தகுதி இல்லாத கணினி ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உத்தரவிட்டிருந்தது.


அதன் பிறகும் அவர்கள் பணியில் தொடர்ந்ததால் சர்ச்சை நீடித்து வந்தது. இந்நிலையில், அவர்கள் அனைவரும் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். கணினி ஆசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த காலி இடங்களை நிரப்புவது குறித்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் பதில் தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக