லேபிள்கள்
- புதிய கல்விக்கொள்கை (2)
- ANNOUNCEMENT (21)
- CCE (12)
- COURT NEWS (466)
- CPS (157)
- DEE PROCEEDING (772)
- DEPARTMENTAL EXAM (66)
- DGE (298)
- DSE PROCEEDING (792)
- Election (6)
- FORMS (101)
- GOs (533)
- GOVT LETTERS (43)
- HOME (5)
- IGNOU (34)
- IT (59)
- MATERIALS (8)
- Mind mab (1)
- NEWS (976)
- PANEL (82)
- PAY ORDER (242)
- PLUS TWO (135)
- PRESS NEWS (8303)
- RTE (1)
- RTI LETTERS (124)
- SCERT (98)
- SSA (421)
- Subject video (4)
- SYLLABUS (7)
- TET (168)
- TRB (189)
- Video (4)
4.7.15
9ம் வகுப்பு, பிளஸ் 1 பாடங்களை புறக்கணிக்க தலைமை ஆசிரியர்கள் முடிவு
நடப்பு கல்வியாண்டின் துவக்கம் முதலே, தேர்ச்சி விகிதத்துக்காக ஆசிரியர்கள் விரட்டப்படுவதால், ஒன்பதாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 பாடங்களை, இம்மாதத்துடன்
3.7.15
பொதுத் தேர்வுகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க60 ஆயிரம் ஆசிரியர்களுக்கு புதிய பயிற்சி
பொதுத் தேர்வுகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க 60 ஆயிரம் ஆசிரியர்களுக்கு புதிய பயிற்சி வழங்கப்பட உள்ளது.
தமிழக பள்ளிகளில் 'எரிசக்தி கிளப்':தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு.
தேசிய எரிசக்தி மேலாண்மைக்குழு சார்பில், பள்ளி மாணவர்களுக்கு, 'எரியாற்றல் சேமிப்பு' குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பிரத்யேக வலைதளம் துவங்கப்பட்டுள்ளது.
வருமான வரி கணக்கு தாக்கலுக்கு தயாராகிறது புது படிவம்
வருமான வரி தாக்கல் செய்ய, புது படிவம் தயாராகி வருகிறது. பாஸ்போர்ட் உள்ளவர்கள், அது தொடர்பான விவரங்களை தெரிவிக்க வேண்டும்.ஆண்டுதோறும், மார்ச், 31ம் தேதிக்குள் வருமான வரியை செலுத்த வேண்டும். ஜூலை, 31ம் தேதிக்குள், அதற்குரிய விரிவான கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
25% இடஒதுக்கீடு விவகாரம்: தனியார் பள்ளிகளில் காலியாக உள்ள இடங்களின் பட்டியல் இணையத்தில் வெளியீடு
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய உரிமைச்சட்டம் 2009ன்படி, 25சதவிகிதம்ஏழைமாணவர்கள் சேர்கை விவகாரத்தில், தனியார் பள்ளிகளில் காலியாக உள்ள இடங்களின் விவரம்.
அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு முதல் 10 நாள் பயிற்சி
அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் இதுவரை ஆண்டுக்கு 5 நாள்களாக இருந்த பணியிடைப் பயிற்சி இந்த ஆண்டு முதல் ஆண்டுக்கு 10 நாள்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
2.7.15
சிறுபான்மை இன குழந்தைகளுக்கான உதவி தொகை பெற தேதி அறிவிப்பு
அரசு, அரசு உதவி பெறும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் முதலாம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை பயின்று வரும், கிறித்துவர், இஸ்லாமியர், புத்த மதத்தினர், சீக்கியர், பார்சி, ஜெயின்
ஆசிரியர்களின் வருகை கல்வித்துறை அதிகாரிகள் கண்காணிப்பு - திண்டுக்கல் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் அதிரடி
ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் ஆசிரியர்களின் வருகையை கல்வித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்ட தொடக்கக்கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் மொத்தம் 1,422 பள்ளிக்கூடங்கள் உள்ளன. இதில், 861 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளும், 200 நடுநிலைப்பள்ளிகளும் அடங்கும்.
இதைத்தவிர 253 உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளும், 23 நகராட்சி பள்ளிகளும், புதிதாக தொடங்கப்பட்ட 5 அரசு தொடக்கப்பள்ளிகளும், 50 கள்ளர் பள்ளிகளும், 16 ஆதிதிராவிடர் பள்ளிகளும், 14 சுய நிதி பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன.
இந்த பள்ளிக்கூடங்களில் 1–ம் வகுப்பு முதல் 5–ம் வகுப்பு வரை செயல்வழி கற்றல் முறையிலும், 6–ம் வகுப்பு முதல் 8–ம் வகுப்பு வரை படைப்பாற்றல் முறையிலும் கல்வி கற்பிக்கப்படுகிறது.
கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு அரசு மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் சில ஆசிரியர்கள் தாங்கள் பணிபுரியும் பள்ளிகளுக்கு சரிவர வருவதில்லை என்ற புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து பள்ளிகளுக்கு தினமும் காலை, மாலை வேளைகளில் கல்வித்துறை அதிகாரிகள் நேரடியாக சென்று கண்காணித்து வருகின்றனர்.
மேலும் பள்ளிக்கூடம் ஆரம்பிக்கிற நேரம், முடிவடையும் நேரம் குறித்து ஆய்வு செய்கிறார்கள். பள்ளிக்கு வருகை தராத ஆசிரியர்கள் குறித்து ரகசிய விசாரணை நடத்தப்படுகிறது. செயல்வழிக்கற்றல், படைப்பாற்றல் கல்வி ஆகியவை முறையாக கற்பிக்கப்படுகிறதா? என்று மாணவ–மாணவிகளிடம் கேட்டறிகின்றனர். 2 ஆசிரியர்களிடம் விளக்கம் 2 ஆசிரியர்கள் மட்டும் பணிபுரிகிற சில பள்ளிக்கூடத்தில், ஒருநாள் விட்டு ஒரு நாள் ஆசிரியர்கள் வந்து செல்வதாக கூறப்படுகிறது. இதுபோன்ற முறைகேட்டில் ஈடுபடுகிற ஆசிரியர்களை கையும், களவுமாக பிடிக்கும் முயற்சியில் கல்வித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
அதன்படி ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒரு பள்ளியில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் பாண்டியராஜன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்த பள்ளிக்கு ஆசிரியர் ஒருவர் வரவில்லை. ஆனால் விடுப்பு எடுத்ததற்கான கடிதத்தையும் அவர் கொடுக்கவில்லை.
இது தொடர்பாக மாணவ–மாணவிகளிடம் தொடக்கக்கல்வி அலுவலர் பாண்டியராஜன் விசாரணை நடத்தினார். அப்போது அங்கு பணிபுரியும் ஆசிரியர்கள், அடிக்கடி பள்ளிக்கு வராமல் இருப்பது தெரியவந்தது. இதில் என்ன கொடுமை என்றால், தங்களுக்கு பாடம் கற்பித்து கொடுக்கிற ஆசிரியரின் பெயரே அந்த மாணவ–மாணவிகளுக்கு தெரியவில்லை.
இதேபோல் மற்றொரு பள்ளியில் ஆய்வு செய்தபோது, சரியாக பள்ளிக்கு வராத இன்னொரு ஆசிரியரும் சிக்கினார். முறைகேட்டில் ஈடுபட்ட 2 ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் அளிக்கிற விளக்கம் திருப்தி இல்லாத பட்சத்தில், 2 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொடக்கக்கல்வி அலுவலர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
தொடக்க கல்வி இயக்குனருடன் TNGTF பொதுச்செயலாளர் சந்திப்பு
TNGTF மாநில பொதுச்செயலாளர் செய்தி:
தொடக்க கல்வி இயக்குனர் சந்திப்பு விவரங்கள்:
👉 Mandapam depytation s discussed with elem director today, the issue will be solved shortly
தொடக்க கல்வி இயக்குனர் சந்திப்பு விவரங்கள்:
👉 Mandapam depytation s discussed with elem director today, the issue will be solved shortly
அரசு தேர்வு துறை இயக்குனர் பணிநிறைவு விழாவில் TNGTF பொதுச்செயலாளர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்
தேர்வுத்துறை இயக்குநர் மதிப்புமிகு தேவராஜன் அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் நமது பொது செயலாளர் மற்றும் தலைமை நிலைய செயலாளர் கலந்து கொண்டு நினைவு பரிசும் வாழ்த்துரை வழங்கினர்
ஆசிரியர் பட்டயப்படிப்பில் ஆர்வம் குறைவு:கோவையில் இரு பயிற்சி பள்ளிகள் மூடல்.
கோவையில், நடப்பு கல்வியாண்டில், ஆசிரியர் பயிற்சி பட்டயப்படிப்பின் மீதுஆர்வம் மாணவர்கள் மத்தியில் குறைந்துள்ளதால், இரண்டு அரசு உதவிபெறும் ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் மாணவர்கள் சேர்க்கையை நிறுத்திக்கொண்டுள்ளது.
அடுத்த கல்வியாண்டு முதல் ஒருங்கிணைந்த பி.எட். பட்டப் படிப்பு
தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகத்தில் அடுத்த கல்வியாண்டு முதல் ஒருங்கிணைந்த பி.எட். பட்டப் படிப்பு தொடங்கப்படும் என்று, துணைவேந்தர் ஜி.விஸ்வநாதன் தெரிவித்தார்
விளையாட்டு விடுதிகளில் மாணவர்கள் சேர்க்கை நாளை நடைபெறுகிறது
விளையாட்டு மேம்பாடு மற்றும் இளைஞர்நலத் துறை சார்பில், அரசின் 28 விளையாட்டு விடுதிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான மாநில தேர்வு நாளை (ஜூலை 3) காலை 8 மணிக்கு நடத்தப்படுகிறது.
எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர இன்று கடைசி நாள்
தமிழகத்தில், ஜூன் 19ம் தேதி முதல், 25ம் தேதி வரை, ஒரு வாரத்திற்கு மருத்துவப் படிப்புக்கான முதற்கட்ட கலந்தாய்வு நடந்தது.
ஆங்கில உச்சரிப்பை கற்பிக்க 'சிடி' பள்ளிகளில் ஆய்வு செய்ய உத்தரவு.
பள்ளிக்கல்வித்துறை சார்பில், அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில உச்சரிப்பை மேம்படுத்தும் நோக்கில் வினியோகிக்கப்பட்ட பிரத்யேக 'சிடி' கற்பித்தலில்
1.7.15
பத்தாம் வகுப்பில் 489 மதிப்பெண் பெற்ற மாணவியை பிளஸ் 1-ல் சேர்க்க மறுத்தது ஏன்?- உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 489 மதிப்பெண் பெற்ற மாணவியை பிளஸ் 1 வகுப்பில் சேர்க்க உத்தரவிடக்கோரிய மனுவுக்கு பதில் அளிக்குமாறு கல்வித் துறை அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ இன்று கவுன்சிலிங் துவக்கம்
ஆசிரியர் பயிற்சி, டிப்ளமோ படிப்புக்கான கவுன்சிலிங், இன்று முதல், 4ம் தேதிவரை நடக்கிறது.தமிழகத்தில், 440 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில், 15 ஆயிரம் இடங்கள் உள்ளன.
'ஆவரேஜ்' மாணவர்களுக்கு தனியார் பள்ளிகள் 'கல்தா'
புதிய கல்வி ஆண்டில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வில், அதிக தேர்ச்சி காட்ட, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.
கல்லூரிகளில் காலிப் பணியிடங்கள்: நிகழ் கல்வியாண்டுக்குள் நிரப்ப தமிழக அரசுக்கு உத்தரவு
கல்லூரிகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிகழ் கல்வியாண்டுக்குள் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அரசுத் தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் பணியிலிருந்து ஓய்வு
அரசுத் தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் பணியிலிருந்து செவ்வாய்க்கிழமை ஓய்வுபெற்றார்.
பள்ளிக் கல்வித் துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய அவர், மாவட்டக் கல்வி அதிகாரி, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி,
அரசுத் தேர்வுகள் துறை இணை இயக்குநர், தொடக்கக் கல்வித் துறை இயக்குநர், மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர், பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். அரசுத் தேர்வுகள் இயக்குநராக 2013-ஆம் ஆண்டு பொறுப்பேற்றார்.
கடந்த 2 ஆண்டுகளில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் இருந்துவந்த பல்வேறு சிக்கலான நடைமுறைகளை அகற்றி, தேர்வுப் பணிகளை எளிமைப்படுத்தினார்.
தேர்வறை முறைகேடுகளைத் தடுக்க விடைத்தாள் பக்கங்கள் அதிகரிப்பு, விடைத்தாளின் முதல் பக்கத்தில் மாணவர்களின் விவரங்களை அச்சிட்டு வழங்கியது, விடைத்தாள்களில் டம்மி எண்ணுக்குப் பதிலாக ரகசிய பார்கோடு எண் முறையை அறிமுகம் செய்தது, விடைத்தாள் நகல்களை ஸ்கேன் செய்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்தது உள்ளிட்ட பல்வேறு புதிய நடைமுறைகளை இவர் அறிமுகப்படுத்தினார்.
தமிழ்நாடு அரசு தேர்வுத் துறை பணியாளர் சங்கம் சார்பில் பிரிவு உபசார விழா டி.பி.ஐ. வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூடுதல் பொறுப்பு: அரசுத் தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் ஓய்வுபெற்றதையடுத்து, அந்தப் பொறுப்பு ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர்-செயலாளர் வசுந்தராதேவியிடம் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வித் துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய அவர், மாவட்டக் கல்வி அதிகாரி, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி,
அரசுத் தேர்வுகள் துறை இணை இயக்குநர், தொடக்கக் கல்வித் துறை இயக்குநர், மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர், பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். அரசுத் தேர்வுகள் இயக்குநராக 2013-ஆம் ஆண்டு பொறுப்பேற்றார்.
கடந்த 2 ஆண்டுகளில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் இருந்துவந்த பல்வேறு சிக்கலான நடைமுறைகளை அகற்றி, தேர்வுப் பணிகளை எளிமைப்படுத்தினார்.
தேர்வறை முறைகேடுகளைத் தடுக்க விடைத்தாள் பக்கங்கள் அதிகரிப்பு, விடைத்தாளின் முதல் பக்கத்தில் மாணவர்களின் விவரங்களை அச்சிட்டு வழங்கியது, விடைத்தாள்களில் டம்மி எண்ணுக்குப் பதிலாக ரகசிய பார்கோடு எண் முறையை அறிமுகம் செய்தது, விடைத்தாள் நகல்களை ஸ்கேன் செய்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்தது உள்ளிட்ட பல்வேறு புதிய நடைமுறைகளை இவர் அறிமுகப்படுத்தினார்.
தமிழ்நாடு அரசு தேர்வுத் துறை பணியாளர் சங்கம் சார்பில் பிரிவு உபசார விழா டி.பி.ஐ. வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூடுதல் பொறுப்பு: அரசுத் தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் ஓய்வுபெற்றதையடுத்து, அந்தப் பொறுப்பு ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர்-செயலாளர் வசுந்தராதேவியிடம் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
30.6.15
TNTET & PGTRB Exam: அக்டோபர் முதல் வாரத்தில் தேர்வுகள் & ஜனவரி 2016 க்குள் புதிய நியமனம்?
முதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு , ஆசிரியர் தகுதித்தேர்வு மற்றும் சிறப்பாசிரியர்களுக்கான போட்டித்தேர்வு குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாக உள்ளன என்றும் அக்டோபர் முதல் வாரத்தில் தேர்வுகள் நடைபெறும் என்றும் புதிய நியமனம் அனைத்தும் ஜனவரி 2016 க்குள் நிறைவடையும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐந்தாண்டு சட்டப்படிப்புகவுன்சிலிங் துவக்கம்
தமிழ்நாடு அம்பேத்கர் சட்ட பல்கலையில், ஐந்தாண்டு, 'ஹானர்ஸ்' படிப்புக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், நேற்று துவங்கியது. முதல் நாளில், 150 பேர்சேர்ந்தனர்.
பார்வை குறைபாடு உள்ளோருக்கு அரசு பணிகளில் வயது வரம்பு சலுகை
மத்திய அரசு பணிகளில் நேரடி நியமனம் செய்யப்படும், பார்வையின்மை, காதுகேளாமை, கை, கால் மூட்டு செயலின்மை, பெருமூளை பாதிப்பு போன்றவற்றால் பாதிக்கப்பட்டோருக்கு, வயது வரம்பு, 10 ஆண்டுகள் தளர்த்தப்பட்டு உள்ளது.
பி.இ.: பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நாளை தொடக்கம்
பொறியியல் சேர்க்கையில் பொதுப் பிரிவினருக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வு புதன்கிழமை (ஜூலை 1) தொடங்க உள்ளது.
29.6.15
2014-15-ம் ஆண்டுக்குரிய மாநில அளவிலான டாக்டர். இராதாகிருஷ்ணன் விருது
2014-15-ம் ஆண்டுக்குரிய மாநில அளவிலான டாக்டர். இராதாகிருஷ்ணன்விருது பெறத் தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் 10.08.15 க்குள் கருத்துருக்களை பள்ளிக் கல்வி
சென்னையில் தொடர்முழக்க போராட்டம். ஜேக்டோ அறிவிப்பு
சென்னையில் இன்று (28.6.15) ஜேக்டோ உயர்மட்ட கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வருகிற ஆகஸ்ட் முதல் தேதியன்று ஜேக்டோவில் உள்ள அனைத்து இயக்கங்களின் மாநிலப்பொதுக்குழு உறுப்பினர்கள் பங்குபெறும் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிஎடுக்கப்பட்டது.
சித்தா, ஆயுர்வேதா படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பம்
தமிழகத்தில், ஆறு அரசு கல்லுாரிகளில், சித்தா (பி.எஸ்.எம்.எஸ்.,), ஆயுர்வேதா (பி.ஏ.எம்.எஸ்.,), யுனானி (பி.யு.எம்.எஸ்.,), நேச்சுரோபதி மற்றும் யோகா (பி.என்.ஒய்.எஸ்.,), ஓமியோபதி (பி.எச்.எம்.எஸ்.,) ஆகிய மருத்துவப் பட்டப் படிப்புகள் உள்ளன.
70 லட்சம் மாணவ, மாணவியருக்கு ஆதார் அட்டை வழங்க சிறப்பு முகாம்
தமிழகத்தில், 70 லட்சம் மாணவ, மாணவியருக்கு, ஆதார் அட்டை வழங்கும் சிறப்பு முகாம்களை, ஜூலையில் நடத்த மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)