லேபிள்கள்

3.7.15

தமிழக பள்ளிகளில் 'எரிசக்தி கிளப்':தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு.

தேசிய எரிசக்தி மேலாண்மைக்குழு சார்பில், பள்ளி மாணவர்களுக்கு, 'எரியாற்றல் சேமிப்பு' குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பிரத்யேக வலைதளம் துவங்கப்பட்டுள்ளது.


ஆண்டுதோறும் டிசம்பர், 14ல், ' தேசிய எரிவாயு பாதுகாப்பு தினம்' கடைபிடிக்கப்படுகிறது. 

இந்த நாளில், எரியாற்றல் சார்ந்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் நடத்தப்படுகின்றன. பள்ளி மாணவர்களுக்கு, இதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், பிரத்யேக வலைதளம் ' www.enregysavers.co.in' என்ற பெயரில் துவக்கப்பட்டுள்ளது. 

இதில், எரிசக்தி என்றால் என்ன, அதன் முக்கியத்து வம், எரிசக்கதி பாதுகாப்பு மற்றும் சேமிக்கும் வழிமுறைகள் குறித்து விளக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும், 1,735 பள்ளிகள் இந்த வலைதளத்தில் ஒருங்கிணைந்துள்ளன. மேலும், தமிழகம் உட்பட, 17 மாநிலங்களில்செயல்படும் பள்ளிகளில், 'எரியாற்றால் கிளப்' துவங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழக தொடக்க கல்வித்துறையின் சார்பில், இந்த வலைதளத்தில் மாணவர்கள் உறுப்பினர்களாக அறிவுறுத்தவும், பயன்படுத்திக்கொள்ள வழிவகை செய்ய வும், பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக