பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாநில அளவில் முதலிடத்தைப் பிடித்த 21 மாணவ, மாணவியருக்கு தலா ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கி, முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் அவர்களை திங்கள்கிழமை வாழ்த்தினார்.இது தொடர்பாக தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தமிழை ஒரு மொழிப்பாடமாகக் கொண்டுமாநில
அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் மாணவர்களுக்கு காசோலைகள், பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி, அவர்களுக்கான மேற்படிப்புச் செலவுகளையும் தமிழக அரசே ஏற்றுக்கொள்கிறது.
பரிசு பெற்ற மாணவ, மாணவியரிடம், - நீங்கள் நாடு போற்றும் வகையில் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று முதலிடத்தைப் பிடித்திருக்கிறீர்கள். உங்களை வாழ்த்துவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். உங்களைப் பார்த்து பெருமை கொள்கிறேன். நீங்கள் அனைவரும் மிக உயரிய இடத்தை அடைந்து வெற்றி காண வேண்டும். உங்கள் அனைவருக்கும் ஒளிமயமான எதிர்காலம் அமைய வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன் - என்று ஜெயலலிதா வாழ்த்தினார்.காசோலைகள், பாராட்டுச் சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்ட மாணவர்கள் முதல்வருக்கு தங்களது நன்றியைத் தெரிவித்துக்கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக