லேபிள்கள்

11.4.13


அண்ணாமலை பல்கலை - இளம் கலை, முதுகலை வகுப்புகள் மற்றும் டிப்ளமோ வகுப்புகளில் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் உள்ளிட்ட அனைத்துப் பாடப்பிரிவுகளின் தேர்வு முடிவுகள்


அனைவருக்கும் கல்வி இயக்கம் - காலியாக உள்ள பகுதி நேரப் பணியாளர்கள் பணியிடம் 15.03.13 அன்றைய நிலவரப்படி பின்னடைவு பணியிடங்கள் உட்பட, காலி பணியிடங்கள் நிரப்ப தேவையான முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்- கொள்ள இயக்குநர் உத்தரவு.

ஓராண்டு கூடுதல் டிகிரிக்கு அங்கீகாரம் மறுத்த 

தனி நீதிபதியின் உத்தரவுக்கு, "உயர்நீதிமன்ற 

பெஞ்ச்' தடை விதித்தற்கான காரணங்கள்

ஐகோர்ட்டில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த, பிரேமகுமாரி என்பவர் 

உள்ளிட்ட, இடைநிலை ஆசிரியர்கள் தாக்கல் செய்த, அப்பீல் மனுவில் 

கூறியிருப்பதாவது: தனி நீதிபதி பின்பற்றியுள்ள, பல்கலைக்கழக மான்யக் 

குழு விதிமுறைகள், 1985ம் ஆண்டு, கொண்டு வரப்பட்டது.

அந்த விதிமுறைகள், 2003ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட புதிய விதிமுறைக
ள்

 மூலம், ரத்து செய்யப்பட்டு விட்டது. "யு.ஜி.சி., விதிமுறைகளுக்கு எதிராக 

உள்ளதாக கருதி, கூடுதல் டிகிரியை, மூன்றாண்டு பட்டப் படிப்புக்கு 

இணையாக கருத முடியாது' என, நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ஓராண்டு 

படிப்பின் மூலம், கூடுதல் டிகிரி பெறுவதை, யு.ஜி.சி., அறிமுகப்படுத்தி 

உள்ளது. யு.ஜி.சி.,யே இந்தத் திட்டத்தை ஏற்றுக் கொண்டிருக்கும் போது, 

ஐகோர்ட் உத்தரவானது, யு.ஜி.சி.,யின் கொள்கைக்கு எதிராக உள்ளது. 

பல்கலைக்கழகங்கள் வழங்கும் கூடுதல் டிகிரியை, தமிழ்நாடு மாநில 

உயர்கல்வி மன்றம் அங்கீகரித்துள்ளது. மூன்றாண்டு பட்டப் படிப்பு 

முடித்தவர்கள் தான், கூடுதல் டிகிரி படிப்பில் சேர, தகுதி உள்ளது. இதை, தனி

 நீதிபதி பரிசீலிக்கவில்லை. எனவே, தனி நீதிபதியின் உத்தரவை, ரத்து 

செய்ய வேண்டும். அதுவரை, தடை விதிக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் 

கூறப்பட்டுள்ளது. இம்மனுவை, நீதிபதிகள் தர்மாராவ், விஜயராகவன் 

அடங்கிய, "டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது. மனுதாரர்கள் சார்பில், 

வழக்கறிஞர் ஜி.சங்கரன் வாதாடினார். தனி நீதிபதியின் உத்தரவுக்கு, 

"டிவிஷன் பெஞ்ச்' தடை விதித்தது. அப்பீல் மனுவுக்குப் பதிலளிக்கும்படி, 

பள்ளி கல்வித் துறைக்கு, "நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டது.

10.4.13


PENSION – TN Govt Pensioners’ Family Security Fund Scheme – Enhancement of financial assistance from Rs.25,000/- to Rs.35,000/- in the case of death of pensioners – Orders – Issued.


பள்ளிக்கல்வித்துறையில் "இரட்டை பட்டம் செல்லாது" என வழங்கப்பட்ட தீர்ப்பிற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

INTERIM ORDER WILL BE UPDATED SHORTLY IN OUR WEBSITE...

பள்ளிக் கல்வித் துறையில் இரட்டை பட்டங்களுக்கு பதவி உயர்வு இல்லை என வழங்கப்பட்ட தீர்ப்பிற்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. சென்ற பதவி உயர்வு கலந்தாய்வின் போது ஏற்கனவே பயின்ற பட்டத்தின் அடிப்படையில் ஒரு வருட காலத்தில் மற்றொரு பட்டபடிப்பை பயின்று அதற்கு பதவி உயர்வு வழங்குவதை எதிர்த்து வழக்கு தொடுக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் "இரட்டை பட்டங்களுக்கு பதவி உயர்வுகிடையாது" உயர்நீதிமன்ற நீதிபதி திரு. இராம சுப்பிரமணியம் தீர்பளித்தார். இத்தீர்ப்பை  எதிர்த்து (WRIT APPEAL NO.529/2013) திருமதி.பிரேமகுமாரி மற்றும் 100க்கு மேற்பட்ட ஆசிரியர்கள் சேர்ந்து தொடுக்கப்பட்ட வழக்கில், வழக்கறிஞர் திரு.G.சங்கரன் அவர்கள் வாதாடினார் இன்று (10.04.2013) இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் திரு. எலிப்  தர்மா ராவ்  மற்றும் திரு. விஜயராகவன் அவர்கள், மேற்கண்ட  "இரட்டை பட்டங்களுக்கு பதவி உயர்வு கிடையாது" என்ற தீர்ப்பிற்கு தடை விதித்து தீர்பளித்தனர். இதனால் வரும் பதவி உயர்வுகலந்தாய்வில் இரட்டை பட்டங்கள் பயின்றோருக்கு பதவி உயர்வுவாய்ப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதுகலை தாவரவியல் பட்டதாரிகளின் தேர்வு பட்டியல் TRB அலுவலக விளம்பர பலகையில் வெளியிடப்பட்டு உள்ளது. ஓரிரு நாட்களில் TRB இணைய தளத்திலும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை மற்றும் முப்பருவ முறை வகுப்பறை நிகழ்வுகள் சார்ந்து தலைமையாசிரியர் /ஆசிரியர்/ பெற்றோர் / ஆசிரிய பயிற்றுநர் ஆகியோரிடம் கருத்தறிய அட்டவணை மற்றும் படிவங்களை அனைவருக்கும் கல்வி இயக்ககம் வெளியீடு

முன்னேற்றுவோம்!                                                                                            முன்னேறுவோம்! 

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு,


குடிமங்கலம் ஒன்றியம்.


 புதிய கிளை துவக்க விழா

நாள்; 11.04.2013 ( வியாழன்)                                                 நேரம்; காலை 9.30

இடம்; சண்முகா ஹோட்டல்,( முதல்மாடி),


குடிமங்கலம் நான்கு ரோடு.

மாநில பொறுப்பாளர்கள், திருப்பூர் மாவட்ட பொறுப்பாளர்கள், வட்டார


 பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து கொள்கிறார்கள்.

பள்ளிக்கல்வி - தற்காலிக பணியிடம் - அரசானை எண்.197-ன் படி தோற்றுவிக்கப்பட்ட 7979 பட்டதாரி ஆசிரியர்களுக்கு 01.04.2013 முதல் ஊதியம் பெற்று வழங்க ஆணை வழங்கி பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு.


'Merger of 50% DA and DR with basic pay' - Central Finance Ministry


'Merger of 50% of DA and DR with basic pay' - Finance Ministry explained as a reply to a unstarred question in the Parliament on 14th December, 2012.The below explanation was presented by the Minister of States for Finance Shri.Namo Narain Meena to the questions regarding merger of DA / DR with basic pay of Central 
Government employees and Pensioners in the Parliament on 14.12.2013...Whether various Associations/ Organisations of Central Government employees demanded merger of 50 per cent Dearness Allowance into the basic pay of Central Government employees and pensioners and the recommendation of the Sixth Central Pay Commission in this regard and action taken by the Government thereto?Yes, A number of representations have been received from Associations/Organizations of Central Government Employees/Pensioners and individuals demanding merger of 50% of Dearness AHowance/ Dearness Relief with basic pay/pension respectively. The demand has been considered by the Government and not agreed to since the 6th Central Pay Commission has not recommended as such. The6th Central Pay Commission did not recommend merger of dearness allowance with Basic Pay at any stage. Government accepted this recommendation vide Government of India Resolution dated 29.08.2008. (Note : Merger 50% of Dearness Allowance with basic pay to the employees of Central Public Sector Enterprises (CPSEs) following 1997 Industrial Dearness Allowance (IDA) pattern of scales of pay with effect from 1.1.2007.)

அனைவருக்கும் கல்வி இயக்கம் - 1 முதல் 4 வகுப்புகளுக்கு சிறுபான்மை மொழியில் செயல்வழிக் கற்றல் அட்டைகள் தயாரித்தல் - மாவட்டங்களில் மொழிப்பெயர்த்தல் பணிமனை நடத்துதல் சார்பு.


அனைவருக்கம் கல்வி இயக்கம் - 2012-13ஆம் கல்வியாண்டில் மைக்ரோசாப்ட நிறுவனத்துடன் ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டு, 7 மாவட்டங்களில் ஏப்ரல் முதல் 3 மாதங்களுக்கு கணினி பயிற்சி தொடர உத்தரவு.


அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் கணக்கிடுவதில் பாரபட்சம் கூடாது - உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு


9.8.1989 அன்று தமிழக அரசு ஓர் அரசாணையை வெளியிட்டது. 1.6.1988 அன்றோ அல்லது அதற்கு பிறகோ பணியிலிருந்து ஓய்வுபெறும் அரசு ஊழியர்களின் அகவிலைப் படியில் அதிகபட்சம் 13 % மட்டுமே ஓய்வூதியம் கணக்கிட எடுத்துக் கொள்ளப்படும் என்று அரசாணையில் கூறப்பட்டிருந்தது. எனினும் 1.1.1996ஆம் தேதியிலிருந்து ஓய்வு பெறுவோருக்கு இந்த ஓய்வூதியக் கணக்கீட்டு முறையில் மாற்றம் செய்யப்பட்டது. 

அரசின் இந்த நடவடிக்கை காரணமாக 1.6.1988 முதல் 31.12.1995 வரை பணியிலிருந்து ஓய்வு பெற்ற தமிழக அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டனர். இது தொடர்பாக கள்ளக்குறிச்சி வட்டார ஓய்வுபெற்ற அரசு அலுவலர்கள் சங்கம் உள்பட ஏராளமான ஓய்வூதியர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி ஓய்வூதியர்களுக்கு சாதகமாகத் தீர்ப்பளித்தாலும், அந்தத் தீர்ப்பை உயர் நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகளைக் கொண்ட அமர்வு ரத்து செய்தது. இதனை எதிர்த்து ஓய்வூதியர்கள் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கில் கடந்த ஜனவரி மாதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
வெவ்வேறு காலகட்டத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கு வெவ்வேறு ஓய்வூதியக் கணக்கீட்டு முறையைப் பின்பற்றி ஓர் அரசு பாரபட்சம் காட்டக் கூடாது என்று அந்தத் தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இது தொடர்பான 9.8.1989ஆம் தேதியிட்ட அரசாணை செல்லாது என்று கூறி அதனை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், பாரபட்சமற்ற, ஒரேவிதமான ஓய்வூதியக் கணக்கீட்டு முறையை அரசு பின்பற்றுமாறு தனது தீர்ப்பில் கூறியுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பின் மூலம் 1.6.1988-ம் தேதிக்கும் 31.12.1995-ம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் ஓய்வுபெற்ற ஆயிரக்கணக்கான ஓய்வூதியர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பின் அடிப்படையில் தமிழக அரசு உரிய உத்தரவைப் பிறப்பிக்கும் என்ற எதிர்பார்ப்பில் அவர்கள் காத்திருக்கின்றனர்.

பள்ளி செல்லா குழந்தைகள் வயது வரம்பு 18 ஆக அதிகரிப்பு.

செல்லா குழந்தைகள், மாற்றுத்திறன் உடைய குழந்தைகளின், வயது வரம்பு, 1பள்ளி 8 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், ஒவ்வொரு ஆண்டும், பள்ளி செல்லா குழந்தைகள், மாற்றுத்திறன் உடைய குழந்தைகள் பற்றி, வீடு வீடாகசென்று கணக்கெடுக்கப்படுகிறது. இதில், கண்டறியப்படும் குழந்தைகளை, உண்டு உறைவிட பள்ளிகள் மற்றும் இணைப்பு பயிற்சி மையங்களில் சேர்த்து, முறையான பயிற்சிக்கு பின், "ரெகுலர்' பள்ளியில் சேர்க்கின்றனர்.இதற்கான கணக்கெடுப்பு, வரும், 10ம் தேதி துவங்கி, ஏப், 27ம் தேதி வரை, நடக்கிறது. இப்பணியில், ஆசிரிய பயிற்றுனர்கள், சிறப்பாசிரியர்கள் ஈடுபடுகின்றனர். இந்த ஆண்டு, 14 முதல் 18 வயது வரையிலான, பள்ளி செல்லா, மாற்றுத்திறனாளி குழந்தைகளை கணக்கெடுத்து, இடைநிலை கல்வி திட்டத்தில் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. முதன் முறையாக, 14 முதல் 18 வயதிலான குழந்தைகளை கணக்கெடுப்பதால், இவர்களுக்கு, உண்டு உறைவிட பள்ளி, இணைப்பு பயிற்சி மைய வசதி ஏற்படுத்தப்படும். வணிக நிறுவனங்களில், 14 வயதுக்கு மேல் பணிபுரியும் ஏராளமான, ஏழை மாணவர்கள், இத்திட்டத்தால் பயன் பெற வாய்ப்பு உள்ளது.வட்டார வள மைய அலுவலர் ஒருவர் கூறுகையில், "பள்ளி செல்லா குழந்தைகள் குறித்த தகவலை, பொதுமக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊர் பிரமுகர்கள், அருகில் உள்ள வட்டார வள மையத்தில் தெரிவிக்கலாம்' என்றார்.

9.4.13

2009 ல் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வேண்டி போராடினோம். அன்று  மறுக்கப்பட்டது.  இன்று சில இடங்களில் தான்  நமக்கு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு  கிடைத்துள்ளது. அதுக்கு ஏன் இப்படி?

8.4.13


தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 12 புதிய கலை, அறிவியல் கல்லூரிகள்

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 12 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். சட்டப் பேரவையில் விதியெண் 110யின் கீழ், அறிக்கை ஒன்றை வாசித்தபோது, அவர் இதனை தெரிவித்தார்.

2013-2014 ஆம் கல்வி ஆண்டில் இருந்தது புதிதாக 8 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டதை சுட்டிக் காட்டிய ஜெயலலிதா, அதோடு சேர்த்து மேலும் 4 கல்லூரிகள் தொடங்கப்படும் என இன்று அறிவித்தார்.

சிவகாசி, கோவில்பட்டி, கடலாடி, முதுகுளத்தூர், திருவாடானை, கரம்பக்குடி, ஓசூர், குமாரபாளையம், காங்கேயம், உத்திரமேரூர், பேராவூரணி ஆகிய 11 இடங்களில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் திறக்கப்படும் என்று தெரிவித்தார்.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள காரிமங்கலத்தில் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் தொடங்கப்படும் என ஜெயலலிதா கூறினார்.

தமிழகத்தின் மையப் பகுதியாக விளங்கும் திருச்சி மாவட்டத்தில் அரசு பொறியியல் கல்லூரி இல்லாததைக் கருத்தில் கொண்டு, ஸ்ரீரங்கத்தில் அரசு பொறியியல் கல்லூரி இந்த ஆண்டு முதல் தொடங்கப்படும் என்றும் ஜெயலலிதா அறிவித்தார்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழுள்ள நான்கு மண்டல மையங்கள் மற்றும் உறுப்பு பொறியியல் கல்லூரிகளுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த , 150 கோடி ரூபாய் செலவிடப்படும் என்றும் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

விளையாட்டு விடுதியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

சிறப்பு விளையாட்டு விடுதியில் சேர, மாணவ, மாணவியரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாணவ, மாணவியர்களுக்கான சிறப்பு விளையாட்டு விடுதி, சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில்,

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் சேரும் மாணவ, மாணவியருக்கு விளையாட்டுக்களில் சிறப்பான முறையில் பயிற்சி அளிப்பதுடன், சத்தான உணவும், உறைவிடமும் வழங்கப்படுகிறது.

இந்த விடுதியில், 2013 - 14ம் ஆண்டில் சேருவதற்கு, பிளஸ், 2 வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இதற்கான தேர்வுகள் கீழ்கண்ட விளையாட்டுகளில் நடத்தப்படும். இதன்படி, ஆண்களுக்கு தடகளம், கூடைப்பந்து, குத்துச்சண்டை, கையுந்து பந்து, தேக்வாண்டோ மற்றும் பெண்களுக்கு தடகளம், கால்பந்து மற்றும் கையுந்து பந்து ஆகிய விளையாட்டுகளில் தேர்ச்சி பெற வேண்டும்.

இதற்கான, விவரங்கள் மற்றும் விண்ணப்பங்களை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, நாளை (9ம் தேதிக்குள்) சமர்ப்பிக்க வேண்டும். இத்தகவல், ஆட்சியர் வீர ராகவ ராவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அரசு பள்ளியில் "செஸ்' விளையாட்டு : தயார் நிலையில் சதுரங்க பலகைகள்

தொடக்க, நடுநிலைப்பள்ளி மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்தும் வகையில், சதுரங்கம் (செஸ்) பலகைகள் விரைவில் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளன. தமிழக அரசு மற்றும் உதவி பெறும் துவக்க, நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவியரின் அறிவுத்திறன், சிந்தனைத்திறன் தூண்டும் வகையில் மாணவர்களுக்கு "செஸ்' விளையாட்டு கற்றுத்தர முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இதற்காக, "செஸ்' போர்டுகள் வாங்க, தமிழக அரசு கடந்த ஆண்டு உத்தரவிட்டது. அதன்படி, 2012-13ம் கல்வியாண்டுக்கு தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும், 7 முதல், 17 வயது வரையுள்ள மாணவ, மாணவியருக்கு சதுரங்க (செஸ்) விளையாட்டுக்கான பலகைகள் வழங்குவதற்கு, 39.47 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. அந்த நிதி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு பிரித்து வழங்கப்பட்டது. "செஸ்' விளையாட்டு திட்டத்தை செயல்படுத்த கொள்முதல் குழு ஏற்படுத்தி ஆணை வெளியிடப்பட்டது. கொள்முதல் குழு தலைவராக, மாவட்ட கல்வி அலுவலரும், உறுப்பினர் செயலராக மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரும், உறுப்பினர்களாக முதன்மை கல்வி அலுவலர் (எஸ்.எஸ்.ஏ.,) உடற்கல்வி இயக்குனர் நிலை-1 (மேல்நிலைப்பள்ளி), தலைமையிட மாவட்ட கல்வி அலுவலர், மண்டல உடற்கல்வி அலுவலர், மண்டல உடற்கல்வி ஆய்வாளர், தலைமையிட உதவி தொடக்கக்கல்வி அலுவலர், தலைமையிட பஞ்., யூனியன் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர், தலைமையிட பஞ்., யூனியன் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொடக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கு இந்த, "செஸ்' போர்டுகள் விரைவில் வழங்கப்பட உள்ளன. முதல் கட்டமாக, திருச்சி மாவட்டத்தில் உள்ள, 1,300க்கும் மேற்பட்ட தொடக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கு, வழங்குவதற்காக, 1,342 "செஸ்' போர்டுகள் கடந்த வாரம் வாங்கப்பட்டுள்ளன. இவை விரைவில் பள்ளி மாணவ, மாணவியருக்கு வழங்கப்பட உள்ளன.

"செஸ்' போர்டுகளுக்கு முகப்பில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் போட்டோ இடம் பெற்றுள்ளது. பள்ளி மாணவ, மாணவியருக்கு தமிழக அரசு வழங்கும், 14 வகையான நலத்திட்ட உதவிகள் குறித்த, "சக்கரம்' இடம் பெற்றுள்ளது.

தொடக்கக் கல்வி - அனைத்து மாவட்டங்கள் - 2013-14 மாணவர் சேர்க்கை அதிகரித்தல் மற்றும் அரசின் நலத் திட்டங்கள் செயல்படுத்துதல் - ADDL CEO / DEEO / ADPC / SUPERVISOR / AEEOs - 15.04.2013 முதல் 30.04.2013 முடிய ஒரு நாள் ஆய்வுக் கூட்டம் நடைபெறுதல் சார்பு.


5.04.2013 அன்று நடைபெற்ற பத்தாம் வகுப்பு கணிதத் தேர்வில் உள்ள ஐயங்கள் இந்த கேள்விகளுக்கு மதிப்பெண் வழங்கப்படுமா!

கேள்வி எண் : 31 தவறு  ( 5 மதிப்பெண் கேள்வி).......முழு மதிப்பெண் கிடைக்குமா!

மற்றும் வினா எண் 2 (1 மதிப்பெண்) இரண்டு வினாவிடை பொருந்தும் இதற்கும் முழு மதிப்பெண் கிடைக்குமா ! மாணவர்கள் எதிபார்ப்பு

CLICK HERE TO DOWNLOAD THE QUESTIONS AND ANSWERS.........................

7.4.13


அண்ணாமலை பல்கலைக்கழகம் துணைவேந்தர் தற்காலிகமாக பணிநீக்கம் செய்து மேதகு ஆளுநர் உத்தரவு.


ஆன்லைனில் "அப்ஜெக்டிவ் டைப்' தேர்வு : T.N.P.S.C.செயலர் தகவல்

""அப்ஜெக்டிவ் டைப்' தேர்வுகளை ஆன்லைனில் நடத்த, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக,'' டி.என்.பி. எஸ்.சி., செயலர் விஜயகுமார் கூறினார். உதவி புள்ளியியல் ஆய்வாளர் தேர்வு "ஆன்லைன்' மூலம் இன்று நடைபெற உள்ளது. இதற்கான தேர்வு மையங்களை ஆய்வு செய்ய, அருப்புக்கோட்டை சவுடாம்பிகா இன்ஜி., கல்லூரி வந்த அவர் கூறியதாவது:உதவி புள்ளியியல் ஆய்வாளர் தேர்வு நாளை (இன்று) 28 மையங்களில், ஆன்லைன் மூலம் நடக்கிறது. 10 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர். சென்னை,மதுரை போன்ற மாநகரங்களில் நடந்த இத்தேர்வு , தற்போது மாவட்டங்களில் நடைமுறை படுத்தப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை மற்றும் சிவகாசியில் நடைபெற உள்ளது. இந்த தேர்வு முறையில், ஆன்லைனில் விடையளித்த அன்றே, மதிப்பெண்களை தெரிந்து கொள்ளலாம். தேர்வு நேரமாக 3 மணி நேரம் வழங்கப்பட்டுள்ளது. தேர்வுகளை ஒன்றரை மணி நேரத்திலே முடித்து விடலாம். மீதமுள்ள நேரத்தில் சரி பார்த்து கொள்ளலாம். 
இந்தியாவிலே தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தான், அதிக வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. தேர்வு முறைகளும் வெளிப்படையாக உள்ளன. தேர்வு எழுதிய வினா மற்றும் விடைதாள் வெளியிடப்படுகிறது. அதற்கான "கீ ஆன்சர்' ரும் வெளியிடப்படுகிறது. விண்ணப்பதாரர் இதை சரிபார்த்து தவறு இருந்தால், 7 நாட்களுக்குள் தெரிவிக்கலாம். காலிபணியிடங்களை வைத்து தான்,தகுதி அடிப்படையில் கவுன்சிலிங் நடைபெறுகிறது.

எந்தவித முறை கேடு ஏற்பட வாய்ப்பு இல்லை. நகர்புற மாணவர்களுக்கு நிகராக கிராமபுற மாணவர்களும் டி.என்.பி.எஸ்.சி., மூலம் ,அதிகமாக தேர்வாகின்றனர். வரும் காலங்களில் "அப்ஜெக்டிவ் டைப்' உள்ள தேர்வுகளை ஆன்லைனில் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, என்றார். 

 தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய செய்திக் குறிப்பு :
குரூப்- 4ல், இளநிலை உதவியாளர், நில அளவர், வரைவாளர் பணிக்கு, 2012, ஜூலை7 ல், தேர்வு நடந்தது.இதில், 1,641 காலிப் பணியிடங்களுக்கான, மூன்றாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு பணி மற்றும் கலந்தாய்வு முறையிலான துறை ஒதுக்கீடு, ஏப்., 17 முதல், 19 வரை, காலை, 8:30 மணிக்கு, தேர்வாணைய அலுவலகத்தில் நடக்கிறது.கலந்தாய்விற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் பதிவு எண், தேதி உள்ளிட்ட விபரங்கள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.கலந்தாய்வில் கலந்து கொள்ளும் விண்ணப்பதாரர்கள், மூலச் சான்றிதழ்கள், சான்றொப்பமிட்ட நகல் சான்றிதழ் கொண்டு வர வேண்டும்.

தொடக்க கல்வி இணை இயக்குனர் கருப்புசாமியிடம், தேர்வுத்துறை இணை இயக்குனர் பணி, கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளது



தேர்வுத்துறை இணை இயக்குனர் ஆரோக்கியசாமி (மேல்நிலை கல்வி)கடந்த மாதம், 31ம் தேதிஓய்வு பெற்றார். இதைத் தொடர்ந்துகருப்புசாமியிடம்,தேர்வுத்துறை இணை இயக்குனர் பணிகூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவர்,ஏற்கனவேதேர்வுத்துறையில் பணி புரிந்தவர் என்பதால்இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காலி பணியிடங்களை நிரப்பாமல்அதிகாரிகளுக்குகூடுதல் பொறுப்பு வழங்கும்போக்குகல்வித்துறையில்அதிகரித்து வருகிறது. ஏற்கனவேபள்ளி கல்வித்துறைஇணை இயக்குனர் கண்ணப்பன்நூலகத்துறை இணை இயக்குனர் பணியை,கூடுதலாக கவனித்து வருகிறார்.
மத்திய இடைநிலைக்கல்வி திட்ட இயக்குனர் இளங்கோவன்ஆசிரியர் பயிற்சி இயக்குனர் பணியைகூடுதலாக கவனித்து வருகிறார். இயக்குனர் நிலையில்,பாடநூல் கழக செயலர் பணியில் உள்ள பிச்சைமெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் பணியைகூடுதலாக கவனித்து வருகிறார்.
புதிய கல்வி ஆண்டு துவங்குவதற்குள்காலி பணியிடங்களை நிரப்புவதற்கு,தமிழக அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால்நிர்வாக சிக்கல்கள் ஏற்பட்டுபணிகள் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்படும்.

வி.ஏ.ஒ. தேர்வு : 5ம் கட்ட கவுன்சிலிங் தேதி அறிவிப்பு

click here download to call letter.........

இதுகுறித்த செய்தி குறிப்பு: வி.ஏ.ஒ. தேர்வுக்கு, தேர்வு செய்யப்பட்ட, 1,781 விண்ணப்பதாரர்களுக்கு, நான்கு கட்ட கவுன்சிலிங் மூலம் பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள, 89 காலி பணியிடங்களை, நிரப்புவதற்கான, ஐந்தாம் கட்ட கவுன்சிலிங் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு பணி, வரும், 16ம் தேதி, காலை, 8:30 மணி முதல், டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் நடக்க உள்ளது. கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்பட்டுள்ள,