விளையாட்டு விடுதியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு
சிறப்பு விளையாட்டு விடுதியில் சேர, மாணவ, மாணவியரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாணவ, மாணவியர்களுக்கான சிறப்பு விளையாட்டு விடுதி, சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில்,
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் சேரும் மாணவ, மாணவியருக்கு விளையாட்டுக்களில் சிறப்பான முறையில் பயிற்சி அளிப்பதுடன், சத்தான உணவும், உறைவிடமும் வழங்கப்படுகிறது.
இந்த விடுதியில், 2013 - 14ம் ஆண்டில் சேருவதற்கு, பிளஸ், 2 வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இதற்கான தேர்வுகள் கீழ்கண்ட விளையாட்டுகளில் நடத்தப்படும். இதன்படி, ஆண்களுக்கு தடகளம், கூடைப்பந்து, குத்துச்சண்டை, கையுந்து பந்து, தேக்வாண்டோ மற்றும் பெண்களுக்கு தடகளம், கால்பந்து மற்றும் கையுந்து பந்து ஆகிய விளையாட்டுகளில் தேர்ச்சி பெற வேண்டும்.
இதற்கான, விவரங்கள் மற்றும் விண்ணப்பங்களை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, நாளை (9ம் தேதிக்குள்) சமர்ப்பிக்க வேண்டும். இத்தகவல், ஆட்சியர் வீர ராகவ ராவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக