பள்ளி செல்லா குழந்தைகள் வயது வரம்பு 18 ஆக அதிகரிப்பு.
செல்லா குழந்தைகள், மாற்றுத்திறன் உடைய குழந்தைகளின், வயது வரம்பு, 1பள்ளி 8 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், ஒவ்வொரு ஆண்டும், பள்ளி செல்லா குழந்தைகள், மாற்றுத்திறன் உடைய குழந்தைகள் பற்றி, வீடு வீடாகசென்று கணக்கெடுக்கப்படுகிறது. இதில், கண்டறியப்படும் குழந்தைகளை, உண்டு உறைவிட பள்ளிகள் மற்றும் இணைப்பு பயிற்சி மையங்களில் சேர்த்து, முறையான பயிற்சிக்கு பின், "ரெகுலர்' பள்ளியில் சேர்க்கின்றனர்.இதற்கான கணக்கெடுப்பு, வரும், 10ம் தேதி துவங்கி, ஏப், 27ம் தேதி வரை, நடக்கிறது. இப்பணியில், ஆசிரிய பயிற்றுனர்கள், சிறப்பாசிரியர்கள் ஈடுபடுகின்றனர். இந்த ஆண்டு, 14 முதல் 18 வயது வரையிலான, பள்ளி செல்லா, மாற்றுத்திறனாளி குழந்தைகளை கணக்கெடுத்து, இடைநிலை கல்வி திட்டத்தில் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. முதன் முறையாக, 14 முதல் 18 வயதிலான குழந்தைகளை கணக்கெடுப்பதால், இவர்களுக்கு, உண்டு உறைவிட பள்ளி, இணைப்பு பயிற்சி மைய வசதி ஏற்படுத்தப்படும். வணிக நிறுவனங்களில், 14 வயதுக்கு மேல் பணிபுரியும் ஏராளமான, ஏழை மாணவர்கள், இத்திட்டத்தால் பயன் பெற வாய்ப்பு உள்ளது.வட்டார வள மைய அலுவலர் ஒருவர் கூறுகையில், "பள்ளி செல்லா குழந்தைகள் குறித்த தகவலை, பொதுமக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊர் பிரமுகர்கள், அருகில் உள்ள வட்டார வள மையத்தில் தெரிவிக்கலாம்' என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக