லேபிள்கள்

7.4.13


தொடக்க கல்வி இணை இயக்குனர் கருப்புசாமியிடம், தேர்வுத்துறை இணை இயக்குனர் பணி, கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளது



தேர்வுத்துறை இணை இயக்குனர் ஆரோக்கியசாமி (மேல்நிலை கல்வி)கடந்த மாதம், 31ம் தேதிஓய்வு பெற்றார். இதைத் தொடர்ந்துகருப்புசாமியிடம்,தேர்வுத்துறை இணை இயக்குனர் பணிகூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவர்,ஏற்கனவேதேர்வுத்துறையில் பணி புரிந்தவர் என்பதால்இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காலி பணியிடங்களை நிரப்பாமல்அதிகாரிகளுக்குகூடுதல் பொறுப்பு வழங்கும்போக்குகல்வித்துறையில்அதிகரித்து வருகிறது. ஏற்கனவேபள்ளி கல்வித்துறைஇணை இயக்குனர் கண்ணப்பன்நூலகத்துறை இணை இயக்குனர் பணியை,கூடுதலாக கவனித்து வருகிறார்.
மத்திய இடைநிலைக்கல்வி திட்ட இயக்குனர் இளங்கோவன்ஆசிரியர் பயிற்சி இயக்குனர் பணியைகூடுதலாக கவனித்து வருகிறார். இயக்குனர் நிலையில்,பாடநூல் கழக செயலர் பணியில் உள்ள பிச்சைமெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் பணியைகூடுதலாக கவனித்து வருகிறார்.
புதிய கல்வி ஆண்டு துவங்குவதற்குள்காலி பணியிடங்களை நிரப்புவதற்கு,தமிழக அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால்நிர்வாக சிக்கல்கள் ஏற்பட்டுபணிகள் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக