லேபிள்கள்
- புதிய கல்விக்கொள்கை (2)
- ANNOUNCEMENT (21)
- CCE (12)
- COURT NEWS (466)
- CPS (157)
- DEE PROCEEDING (772)
- DEPARTMENTAL EXAM (66)
- DGE (298)
- DSE PROCEEDING (792)
- Election (6)
- FORMS (101)
- GOs (533)
- GOVT LETTERS (43)
- HOME (5)
- IGNOU (34)
- IT (59)
- MATERIALS (8)
- Mind mab (1)
- NEWS (976)
- PANEL (82)
- PAY ORDER (242)
- PLUS TWO (135)
- PRESS NEWS (8303)
- RTE (1)
- RTI LETTERS (124)
- SCERT (98)
- SSA (421)
- Subject video (4)
- SYLLABUS (7)
- TET (168)
- TRB (189)
- Video (4)
23.7.16
பெண்கல்வி ஊக்கத்தொகை : ஆதார் எண் கட்டாயம்
பெண்கல்வி ஊக்கத் தொகை பெற ஆதார் எண் கட்டாயம் சமர்பிக்க வேண்டும், என, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பி.எஸ்சி., நர்சிங் படிப்பு 25 முதல் விண்ணப்பம்
பி.எஸ்சி., நர்சிங் உள்ளிட்ட, ஒன்பது விதமான மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம், ஜூலை, 25 முதல் துவங்கும்' என, மருத்துவக் கல்வி இயக்ககம்
பள்ளியில் தூங்கிய தலைமை ஆசிரியர் 'சஸ்பெண்ட்'
ஒட்டன்சத்திரம் அருகே மாணவர் இல்லாத பள்ளியில், வகுப்பறையில் துாங்கிய தலைமை ஆசிரியரை, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சஸ்பெண்ட் செய்தார்.
சிறப்பு உடனடித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தொடக்கக் கல்வி பட்டயப் படிப்புக்கு (DTED) ஜூலை 25 முதல் ஆகஸ்ட் 1 வரை விண்ணப்பிக்கலாம்
பிளஸ் 2 சிறப்பு உடனடித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்காக நடைபெறவுள்ள தொடக்கக் கல்வி பட்டயப்படிப்பு மாணவர் சேர்க்கைக் கலந்தாய்வில் பங்கேற்க ஜூலை 25-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 1 வரை விண்ணப்பிக்கலாம்.
இன்ஸ்பயர்' விருது தொகையில் 'தில்லாலங்கடி' : கொதிப்பில் மாணவர்கள்
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் புத்தாக்க அறிவியல் ஆய்வு (இன்ஸ்பயர்) விருதுகளுக்கான மத்திய அரசு
தொடக்க பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் திறன் குறித்து அறிக்கை தர வேண்டும்: அனைவருக்கும் கல்வி இயக்கக இயக்குநர் பூஜா குல்கர்னி உத்தரவு
தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் அடிப்படை திறன் மேம்பாட்டில் ஏதாவது குறைபாடு உள்ளதா என்று கண்டறிந்து செப்டம்பர் மாதத்தில் அறிக்கை தர வேண்டும்
22.7.16
தமிழக பட்ஜெட் 2016-17 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த உயர்மட்ட குழு
சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. காலை 11 மணிக்கு பேரவையில் 2016-17-ம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்: அரசு ஊழியர்கள் பெருந்திரள் முறையீடு
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்துவிட்டு அனைவருக்கும் பழைய பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்
தமிழக சட்டசபையில் பட்ஜெட் தாக்கல்... முக்கிய அம்சங்கள்...
💥💥💥💥💥💥💥💥
தமிழக பட்ஜெட் அறிவிப்பு கள்
💥💥💥💥💥💥💥💥💥
* பள்ளி கல்வித்துறைக்கு ரூ.24.130 கோடி நிதி ஒதுக்கீடு
தமிழக பட்ஜெட் அறிவிப்பு கள்
💥💥💥💥💥💥💥💥💥
* பள்ளி கல்வித்துறைக்கு ரூ.24.130 கோடி நிதி ஒதுக்கீடு
பிளஸ் 2 மாணவர்களுக்கு விரைவில் சிறப்பு கையேடு
ராமநாதபுரம்: பிளஸ் 2 மாணவர்களுக்கு இந்தாண்டு முன் கூட்டியே இலவச சிறப்பு கையேடு வழங்கப்படுகிறது.
அரசு பள்ளிகளில் புதிய வகுப்பறைகள் கட்டுவதில் சிக்கல் நிதி ஒதுக்கியும் இடமின்றி தவிக்கும் 'வினோதம்'
மதுரை: மதுரையில் அரசு பள்ளிகளில் புதிய வகுப்பறைகள் கட்ட நிதி ஒதுக்கப்பட்டும் இடவசதி இல்லாததால் கட்டுமான பணியை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
21.7.16
பொது கலந்தாய்வு விதியில் மாற்றம் : ஆசிரியர்கள் வலியுறுத்தல்
ஆசிரியர்கள் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு தொடர்பாக கல்வித்துறை வெளியிட்டுள்ள புதிய விதிமுறையால் பெரும்பாலான ஆசிரியர்கள் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு ஆக., 3ல் துவங்கி செப்., 4 வரை நடக்கிறது. இந்தாண்டில் கலந்தாய்வு விதிமுறையில் கல்வித்துறை மாற்றம் செய்துள்ளது.
பிளஸ் 2 உடனடி துணைத்தேர்வு 'ரிசல்ட்' இன்று வெளியீடு
பிளஸ் 2 உடனடி துணைத்தேர்வின் முடிவுகள், இன்று வெளியிடப்படுகின்றன. இதுகுறித்து, தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தரா தேவி, நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மாணவர்கள் பிறந்த நாளிலும் சீருடை அணிவது கட்டாயம்; கல்வித்துறை உத்தரவு
பள்ளிக்கு வரும் மாணவர்கள், பிறந்த நாளாக இருந்தாலும் சீருடையில் வர வேண்டும். மொபைல் போன், இரு சக்கர வாகனங்கள் கொண்டு வருவதற்கு தடை உள்ளிட்ட, 11 விதிகளை பின்பற்ற வேண்டுமென, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
20.7.16
கவுன்சிலிங்கில் காலியிடங்கள் அதிகரிப்பு : இன்ஜி., கல்லூரிகள் சலுகை அறிவிப்பு
இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., - பி.ஆர்க்., படிப்புகளில், கவுன்சிலிங் மூலம் மாணவர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.
முறைகேடு ஆசிரியர்கள் ஊதிய உயர்வு, பதவி உயர்வு ரத்து; குற்ற வழக்கும் பாயும்
பிளஸ் 2 தேர்வு முறைகேட்டில் சிக்கிய ஆசிரியர்களின் பதவி உயர்வு, ஊதிய உயர்வை ரத்து செய்யவும், அவர்கள் மீது குற்ற வழக்கு தொடரவும், கல்வித் துறை அதிகாரிகள்
பிளஸ் 2 பொதுத்தேர்வு வினாக்களில் புதிய மாற்றம் : மனப்பாட பதிலுக்கு இனி 'சென்டம்' கிடைக்காது
பிளஸ் 2 பொதுத்தேர்வு வினாத்தாளில், இந்த ஆண்டு பெரியளவில் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது.
19.7.16
இலவச பஸ் பாஸ்: முதல்வர் துவக்கி வைப்பு
பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவியருக்கு, இலவச பஸ் பாஸ், 'ஸ்மார்ட் கார்டு' வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா, நேற்று துவக்கி வைத்தார்.
ஆசிரியரின் ஓய்வூதியத்தில் பிடித்தம் செய்த மாவட்ட கருவூல அதிகாரியின் உத்தரவுக்கு தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு
ஆசிரியரின் ஓய்வூதியத்தில் பிடித்தம் செய்த மாவட்ட கருவூல அதிகாரியின் உத்தரவுக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வேலைவாய்ப்புப் பதிவு தொடங்கியது:ஆக.1 வரை பதிவு செய்ய வாய்ப்பு
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான வேலைவாய்ப்புப் பதிவு திங்கள்கிழமை தொடங்கியது.
18.7.16
இணைப் பள்ளிகள் கற்றல் முறை திட்டம் மாநிலம் முழுவதும் செயலாக்கம்
நாகப்பட்டினம் மாவட்டத்தில் பரிசோதனை முயற்சியில் தொடங்கப்பட்ட இணைப் பள்ளிகள் கற்றல் முறை திட்டத்தை மாநிலம் முழுவதும் செயல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இலவச உயர்கல்வி தரும் 'உதான்' திட்டம்:பதிவு செய்ய 20ம் தேதி வரை அவகாசம்.
மத்திய அரசு சார்பில், உயர்கல்வி நிறுவனங்களில் மாணவியர் இலவசமாக சேரும், 'உதான்' திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் அவகாசம், 20ம் தேதி வரை நீடிக்கப்பட்டு
இன்று நடைபெறுவதாக இருந்த மருத்துவ கலந்தாய்வு ஒத்திவைப்பு
தமிழகத்தில் இன்று நடைபெறுவதாக இருந்த, மருத்துவ படிப்புக்கான இரண்டாம்கட்ட கலந்தாய்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
அரசு பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்த... திட்டம்!தேர்ச்சி சதவீதம் உயர்த்த கல்வித் துறை புதுமை
சிகரத்தை தொட்ட பல்துறை நிபுணர்களை அழைத்து வந்து, அரசுபள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்த பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
நல்லாசிரியர் விருதுக்கு 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்'
நல்லாசிரியர் விருது பெற ஜூலை 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
17.7.16
தூய்மை பள்ளி விருது திட்டம்: 'மொபைல் ஆப்' அறிமுகம்
மத்திய அரசின் துாய்மை பள்ளி திட்டத்தில் விண்ணப்பிக்க, 'மொபைல் ஆப்' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின், 'துாய்மை இந்தியா' திட்டம் எனப்படும், 'ஸ்வச் பாரத்' திட்டத்தின் கீழ், 'ஸ்வச் வித்யாலயா' என்ற பெயரில், துாய்மை பள்ளி விருது வழங்கப்படுகிறது.
பள்ளிகள் அருகில் நொறுக்கு தீனி விற்க தடை
அரசு பள்ளிகளை சுற்றி, மாணவர்கள் உடல்நலனை பாதிக்கும் நொறுக்கு தீனி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
துணைவேந்தர் நியமனத்தில் அரசு அலட்சியம்: தகுதியானவர்களை தேடும் உயர்கல்வித் துறை
பல்கலை துணைவேந்தர் நியமனத்தில், அரசு கவனம் செலுத்தாததால், உயர்கல்வி பணிகள் முடங்கி உள்ளன.
இதனால், தமிழகத்தில் தகுதியான கல்வியாளர்கள் இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழகத்தில், ஐந்து ஆண்டுகளாகவே உயர்கல்வி நிர்வாகம், அதல பாதாளத்துக்கு செல்வது போல உள்ளது. உயர்கல்வி மன்றத்தில் உரிய தலைவர்கள் இல்லை; துணைவேந்தர்கள் நியமனத்தில் கடும் இழுபறி; 'நெட்' தேர்வு நடத்துவதில் குழப்பம். கல்லுாரி பேராசிரியர்கள் நியமனத்தில் குளறுபடி; கல்லுாரி முதல்வர்கள் பணியிடங்களை நிரப்புவதில் அலட்சியம் என, பல பிரச்னைகள், உயர்கல்வித் துறையில், ஒன்று கூடி நிற்பதாக, கல்வியாளர்கள் தொடர்ந்து புகார் தெரிவிக்கின்றனர்.
குழு அமைப்பு : மதுரை காமராஜர் பல்கலையில், ஓர் ஆண்டுக்கு முன், துணைவேந்தராக இருந்த கல்யாணி ஓய்வு பெற்றார். அதன் பின், புதிய துணைவேந்தரை நியமிக்க, பேராசிரியர் முருகதாஸ் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவிற்கு உரிய சுதந்திரம் இல்லாமல், பிரச்னை ஏற்பட்டது. குழு உறுப்பினர் பேராசிரியர் ராமசாமி ராஜினாமா செய்தார். அதற்கு மாற்றாக இதுவரை இன்னும் புதிய உறுப்பினர் நியமிக்கப்படவில்லை; துணைவேந்தரும் நியமிக்கப்படவில்லை சென்னை பல்கலையில், ஆறு மாதங்களுக்கு முன் துணைவேந்தர் தாண்டவன் ஓய்வு பெற்றார். பின், தேடல் குழு அமைக்கப்பட்டது; இந்தக் குழு பரிந்துரை பட்டியலை தயார் செய்து விட்டது. இருப்பினும், துணைவேந்தரை தேர்வு செய்வது தள்ளி போடப்பட்டுள்ளது அண்ணா பல்கலையில், மே மாதம் துணைவேந்தர் ராஜாராம் ஓய்வு பெற்றார். அதற்கு பின், நிர்வாகத்துக்கு மட்டும் ஒருங்கிணைப்பு குழு நியமிக்கப்பட்டது. புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய தேடல் குழு நியமிக்கப்படவில்லை.
சட்டசபை தேர்தலுக்கு பின், உயர்கல்விக்கு புதிய அமைச்சர், புதிய செயலர் (பொறுப்பு) நியமிக்கப்பட்ட பிறகும், உயர்கல்வித் துறையின் குளறுபடிகளும், குழப்பங்களும் தொடர்கின்றன. அதனால், பல்கலைகளின், 'அகாடமிக் கவுன்சில்' எனப்படும், கல்விக்குழு கூடி, புதிய பாடத்திட்டங்களை கொண்டு வர முடியாத நிலை உள்ளது. பட்டம் பெற முடியவில்லை : அதேபோல, பல்கலை மானியக்குழுவான, யு.ஜி.சி.,யின் மானியங்கள் பெறுவதிலும் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும், பட்டமளிப்பு விழாக்கள் தள்ளி வைக்கப்பட்டு, மாணவ, மாணவியர் உரிய நேரத்தில் பட்டம் பெற முடியாத நிலை உள்ளது.
இதுகுறித்து தமிழக உயர்கல்வித்துறை வட்டாரத்தில் விசாரித்த போது, தமிழக அரசின் உயர்கல்வித்துறைக்கு தகுந்த, அவர்கள் எதிர்பார்க்கும் பேராசிரியர்கள், கல்வியாளர்களை தேர்வு செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். எனவே, தமிழகத்தில் தகுதியான கல்வியாளர்கள் இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆகஸ்ட் மாத இறுதியில் எம்.பி.பி.எஸ். 2-ஆம் கட்ட கலந்தாய்வு?
தமிழகத்தில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் மாத இறுதியில் நடக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
10-ஆம் வகுப்பு முடித்தோருக்கு பள்ளிகளில் வேலைவாய்ப்பு பதிவு நாளை தொடக்கம்
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, அவர்கள் படித்த பள்ளியிலேயே வேலைவாய்ப்பு பதிவினைச் செய்வதற்கு தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)