லேபிள்கள்

19.7.16

இலவச பஸ் பாஸ்: முதல்வர் துவக்கி வைப்பு

பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவியருக்கு, இலவச பஸ் பாஸ், 'ஸ்மார்ட் கார்டு' வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா, நேற்று துவக்கி வைத்தார்.


தமிழகத்தில் உள்ள, அனைத்து பள்ளிகள், மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பள்ளிகள், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள், அரசு பாலிடெக்னிக் மற்றும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில், இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. கடந்த கல்வியாண்டில், 480 கோடி ரூபாய் செலவில், 28 லட்சம் மாணவ, மாணவியருக்கு, இலவச பஸ் பாஸ் ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டது; நடப்பு ஆண்டில், 504 கோடி ரூபாய் செலவில், 31.11 லட்சம் பேருக்கு வழங்கப்பட உள்ளது.



தலைமைச் செயலகத்தில், நேற்று நடந்த நிகழ்ச்சியில், இந்த திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்து, ஐந்து பள்ளி மாணவ, மாணவியருக்கு, இலவச பஸ் பாசை வழங்கினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக