பல்கலை துணைவேந்தர் நியமனத்தில், அரசு கவனம் செலுத்தாததால், உயர்கல்வி பணிகள் முடங்கி உள்ளன.
இதனால், தமிழகத்தில் தகுதியான கல்வியாளர்கள் இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழகத்தில், ஐந்து ஆண்டுகளாகவே உயர்கல்வி நிர்வாகம், அதல பாதாளத்துக்கு செல்வது போல உள்ளது. உயர்கல்வி மன்றத்தில் உரிய தலைவர்கள் இல்லை; துணைவேந்தர்கள் நியமனத்தில் கடும் இழுபறி; 'நெட்' தேர்வு நடத்துவதில் குழப்பம். கல்லுாரி பேராசிரியர்கள் நியமனத்தில் குளறுபடி; கல்லுாரி முதல்வர்கள் பணியிடங்களை நிரப்புவதில் அலட்சியம் என, பல பிரச்னைகள், உயர்கல்வித் துறையில், ஒன்று கூடி நிற்பதாக, கல்வியாளர்கள் தொடர்ந்து புகார் தெரிவிக்கின்றனர்.
குழு அமைப்பு : மதுரை காமராஜர் பல்கலையில், ஓர் ஆண்டுக்கு முன், துணைவேந்தராக இருந்த கல்யாணி ஓய்வு பெற்றார். அதன் பின், புதிய துணைவேந்தரை நியமிக்க, பேராசிரியர் முருகதாஸ் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவிற்கு உரிய சுதந்திரம் இல்லாமல், பிரச்னை ஏற்பட்டது. குழு உறுப்பினர் பேராசிரியர் ராமசாமி ராஜினாமா செய்தார். அதற்கு மாற்றாக இதுவரை இன்னும் புதிய உறுப்பினர் நியமிக்கப்படவில்லை; துணைவேந்தரும் நியமிக்கப்படவில்லை சென்னை பல்கலையில், ஆறு மாதங்களுக்கு முன் துணைவேந்தர் தாண்டவன் ஓய்வு பெற்றார். பின், தேடல் குழு அமைக்கப்பட்டது; இந்தக் குழு பரிந்துரை பட்டியலை தயார் செய்து விட்டது. இருப்பினும், துணைவேந்தரை தேர்வு செய்வது தள்ளி போடப்பட்டுள்ளது அண்ணா பல்கலையில், மே மாதம் துணைவேந்தர் ராஜாராம் ஓய்வு பெற்றார். அதற்கு பின், நிர்வாகத்துக்கு மட்டும் ஒருங்கிணைப்பு குழு நியமிக்கப்பட்டது. புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய தேடல் குழு நியமிக்கப்படவில்லை.
சட்டசபை தேர்தலுக்கு பின், உயர்கல்விக்கு புதிய அமைச்சர், புதிய செயலர் (பொறுப்பு) நியமிக்கப்பட்ட பிறகும், உயர்கல்வித் துறையின் குளறுபடிகளும், குழப்பங்களும் தொடர்கின்றன. அதனால், பல்கலைகளின், 'அகாடமிக் கவுன்சில்' எனப்படும், கல்விக்குழு கூடி, புதிய பாடத்திட்டங்களை கொண்டு வர முடியாத நிலை உள்ளது. பட்டம் பெற முடியவில்லை : அதேபோல, பல்கலை மானியக்குழுவான, யு.ஜி.சி.,யின் மானியங்கள் பெறுவதிலும் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும், பட்டமளிப்பு விழாக்கள் தள்ளி வைக்கப்பட்டு, மாணவ, மாணவியர் உரிய நேரத்தில் பட்டம் பெற முடியாத நிலை உள்ளது.
இதுகுறித்து தமிழக உயர்கல்வித்துறை வட்டாரத்தில் விசாரித்த போது, தமிழக அரசின் உயர்கல்வித்துறைக்கு தகுந்த, அவர்கள் எதிர்பார்க்கும் பேராசிரியர்கள், கல்வியாளர்களை தேர்வு செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். எனவே, தமிழகத்தில் தகுதியான கல்வியாளர்கள் இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக