லேபிள்கள்

23.7.16

பள்ளியில் தூங்கிய தலைமை ஆசிரியர் 'சஸ்பெண்ட்'

ஒட்டன்சத்திரம் அருகே மாணவர் இல்லாத பள்ளியில், வகுப்பறையில் துாங்கிய தலைமை ஆசிரியரை, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சஸ்பெண்ட் செய்தார்.


 திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் ஒன்றியம் ஆலயக்கவுண்டன்பட்டியில், 1989 முதல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்குகிறது. இரண்டு மாணவர்கள் மட்டுமே படிப்பதாக வருகை பதிவேட்டில் குறிப்பு உள்ளது. ஆனால், அவர்களும் இப்பள்ளிக்கு வருவது இல்லை. தலைமை ஆசிரியர் மற்றும் ஒரு உதவி ஆசிரியர் பணியில் உள்ளனர். உதவி ஆசிரியர் அயற்பணியில் (டெபுடேஷன்) வேறு பள்ளிக்கு சென்று விட்டார். 

தலைமை ஆசிரியர் ராமராஜ் மட்டுமே உள்ளார். நேற்று முன்தினம், மதியம், 12:00 மணிக்கு பள்ளியில், இரண்டு வகுப்பறைகளில் ஒன்று பூட்டப்பட்டு இருந்தது. மற்றொரு வகுப்பறையில் உள் தாழ்ப்பாள் போட்டு, தலைமை ஆசிரியர் ராமராஜ் துாங்கினார். இதுகுறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியானது. 

இதையடுத்து, மாவட்ட தொடக்கக் கல்வித்துறை அதிகாரிகள் தலைமை ஆசிரியர் ராமராஜிடம் விசாரணை நடத்தினர். வகுப்பு நேரத்தில் தலைமை ஆசிரியர் துாங்கியது தெரியவந்ததும், மேலதிகாரிகள் உத்தரவுப்படி, ராமராஜை தற்காலிக பணியிடை நீக்கம் செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக