லேபிள்கள்
- புதிய கல்விக்கொள்கை (2)
- ANNOUNCEMENT (21)
- CCE (12)
- COURT NEWS (466)
- CPS (157)
- DEE PROCEEDING (772)
- DEPARTMENTAL EXAM (66)
- DGE (298)
- DSE PROCEEDING (792)
- Election (6)
- FORMS (101)
- GOs (533)
- GOVT LETTERS (43)
- HOME (5)
- IGNOU (34)
- IT (59)
- MATERIALS (8)
- Mind mab (1)
- NEWS (976)
- PANEL (82)
- PAY ORDER (242)
- PLUS TWO (135)
- PRESS NEWS (8303)
- RTE (1)
- RTI LETTERS (124)
- SCERT (98)
- SSA (421)
- Subject video (4)
- SYLLABUS (7)
- TET (168)
- TRB (189)
- Video (4)
20.4.13
19.4.13
தமிழ்நாடு அரசு பணியாளர் சிறப்பு சேம நல நிதி மற்றும் பணிக்கொடை திட்டம், 2000- திட்டத்தின் கீழ் வட்டி கணக்கிட்டு வழங்குவது புதிய அரசானை வெளியீடு
click here to download the GO 61 dated 28.02.2013 -
Special Provident fund , Rate of Interest by 2000
( 31.03.2013 வரை 11%மும் 01.04.2013 முதல் அரசால் அவ்வப்போது வழங்கப்படும் வட்டிவீதத்தின் படி அளிக்க ஆணை )
( 31.03.2013 வரை 11%மும் 01.04.2013 முதல் அரசால் அவ்வப்போது வழங்கப்படும் வட்டிவீதத்தின் படி அளிக்க ஆணை )
ஜூலை 1ம் தேதி முதல் பி.எப் கணக்கை ஆன்லைனில் மாற்றலாம்
வேறு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ப்பவர்கள், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கை இனி ஆன்லைனிலேயே மாற்றிக் கொள்ளும் வசதி ஜூலை 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது. தொழிலாளர் வருங்கால
வைப்பு நிதி (இ.பி.எப்) ஆணையர் அனில் சொரூப் டெல்லியில் நேற்று அளித்த பேட்டி: பி.எப். சந்தாதாரர்களுக்கு பல்வேறு புதிய வசதிகளை செய்து தர திட்டமிட்டுள்ளோம். ஒரு நிறுவனத்தில் இருந்து விலகி, வேறு நிறுவனத்தில் வேலைக்கு சேரும்போது தங்கள் பி.எப் கணக்கை மாற்றுவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளது. இதை தடுக்க புதிய நடைமுறை வரும் ஜூலை 1ம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது. இதன்படி, கணக்கை மாற்ற ஆன்லைனில் விண்ணப்பித்தால்போதும். அவர் ஏற்கனவே வேலை பார்த்த நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு, உரிய ஆவணங்களை பெற்று கணக்கு புதிய நிறுவனத்துக்கு மாற்றப்படும். இதற்காக புதிய மத்திய அலுவலகம் தொடங்கப்படும். விண்ணப்பத்தின் நிலை என்ன என்பதை ஆன்லைனில் தெரிந்து கொள்ளலாம். இது தவிர தங்கள் கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்கும் இனி ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை அமல்படுத்தப்படும். நாடு முழுவதும் உள்ள 5 கோடி சந்தாதாரர்களுக்கு நிரந்தர கணக்கு எண் வழங்கும் பணி இன்று 10 மாதத்தில் முடிவடையும். இவ்வாறு அனில் சொரூப் கூறினார்.
17.4.13
பாழடைந்த பள்ளிகளுக்கு புதிய கட்டடம் உறுதித்தன்மை ஆய்வு செய்ய உத்தரவு
அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை உயர்த்தும் வகையில், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, அரசு அறிவுறுத்தியுள்ளது. பழைய பள்ளி கட்டடங்களின், உறுதி தன்மையை ஆராயும் பணி விரைவில் துவங்கப்படுகிறது.
தமிழகத்தில், நகர்புறங்களை விட கிராமங்களில், அரசு பள்ளிகளின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. இப்பள்ளிகளில், ஆண்டுதோறும், மாணவர் எண்ணிக்கை சரிந்து வருகிறது. பெரும்பாலான பள்ளிகளில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை அதிகபட்சமாக 40 மாணவர்கள் படிக்கும் நிலை உள்ளது. நடப்பாண்டில் மாணவர் சேர்க்கையை உயர்த்தும் வகையில், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகள், நகராட்சி நிர்வாகத்தாலும், கிராமங்களில் உள்ள பள்ளிகள், ஒன்றியங்களாலும் மேம்படுத்தப்பட உள்ளது. முதல் கட்டமாக, பழைய கட்டடத்தில் செயல்படும், பள்ளிகளின் உறுதித் தன்மை குறித்து, பொறியாளர்கள் மூலம் ஆராய திட்டமிடப்பட்டுள்ளது.
வலுவான நிலையில் உள்ள பள்ளி கட்டங்களை புதுப்பிக்கவும், மோசமான நிலையில் உள்ள பள்ளிகளுக்கு, புதிய கட்டடம் கட்டவும் அரசு உத்தரவிட்டுள்ளது. இப்பணிகளை, ஒருங்கிணைந்த பள்ளி உட்கட்டமைப்பு திட்டத்தில் மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும், இதர திட்டங்களில், கழிப்பிடம், குடிநீர் வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளன.மே மாத இறுதிக்குள், பள்ளி கட்டடத்தின் நிலையை பொறுத்து, புனரமைப்புப் பணி மேற்கொள்ளப்படுகிறது.ஒன்றிய அதிகாரிகள் கூறுகையில், "கிராமப்புற பள்ளிகளில், கூடுதல் வகுப்பறை, தலைமை ஆசிரியர் அறை, கழிப்பிட வசதிகள் அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒரு சில கிராமங்களில் மட்டும், பழைய கட்டடத்தில் பள்ளிகள் செயல்படுகின்றன. இக்கட்டடங்கள் ஏற்கனவே கணக்கெடுக்கப்பட்டுள்ளன. பள்ளிகளை புதுப்பிக்க, கல்வித்துறை அதிகாரிகளிடமும் உதவி கேட்கப்பட்டுள்ளது' என்றனர்.
அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஞாயிறன்று விடுமுறை
அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஞாயிறன்று விடுமுறை அளிக்கப்படும் என சட்டசபையில் இன்று விதி எண் 110ன் கீழ் பேசிய தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். ஓய்வுபெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு சிறப்பு ஓய்வூதியமாக ரூ.1,000 வழங்கப்படும் எனவும், ஞாயிற்றுக்கிழமைக்கான உணவு கெட்டுப் போகாமல் சனிக்கிழமையன்றே வழங்கப்படும் எனவும் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
அரசு ஊழியர்கள் / ஆசிரியர்களின் பொது வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் 01.04.2013 முதல் 8.8%ல் இருந்து 8.7%ஆக குறைப்பு
2013-14ஆம் நிதியாண்டுக்கான பொது வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் 01.04.2013 முதல் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து கடந்த வாரம் வெளியிடப்படப்பட்ட மத்திய நிதி அமைச்சக உத்தரவின் படி மத்திய அரசு ஊழியர்களுக்கான பொது வருங்கால வைப்பு நிதி மற்றும் பிற ஒத்த வைப்பு நிதிக்கு 2013-14ஆம் நிதியாண்டிற்கான வட்டி விகிதம் 8.7 சதவீதமாக அறிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில்(2012-13) பொது வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் 8.8%ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வட்டி விதமானது 01.04.2013ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று மத்திய நிதி அமைச்சக உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வுத்தரவானது கீழ்காணும் நிதி அமைப்புகளுக்கு பொருந்தும்:-
1. பொது வருங்கால வைப்பு நிதி (மத்திய சேவைகள்).
2. பங்களிப்பு சேம நல நிதியம் (இந்தியா).
3. அனைத்து இந்திய சேவைகள் சேம நல நிதியம்.
4. மாநிலம் ரயில்வே சேம நல நிதியம்.
5. பொது வருங்கால வைப்பு நிதி (பாதுகாப்பு சேவைகள்).
6. இந்திய ராணுவ தளவாட துறை சேம நல நிதியம்.
7. இந்திய ராணுவ தளவாட தொழிற்சாலைகள் workmen நாட்டின் வருங்கால வைப்பு நிதி.
8. இந்திய கடற்படை கப்பல் பட்டறை workmen நாட்டின் வருங்கால வைப்பு நிதி.
9. பாதுகாப்பு சேவைகள் அதிகாரிகள் சேம நல நிதியம்.
10. ஆயுதப்படைகள் பணியாளர் வருங்கால வைப்பு நிதி.
1. பொது வருங்கால வைப்பு நிதி (மத்திய சேவைகள்).
2. பங்களிப்பு சேம நல நிதியம் (இந்தியா).
3. அனைத்து இந்திய சேவைகள் சேம நல நிதியம்.
4. மாநிலம் ரயில்வே சேம நல நிதியம்.
5. பொது வருங்கால வைப்பு நிதி (பாதுகாப்பு சேவைகள்).
6. இந்திய ராணுவ தளவாட துறை சேம நல நிதியம்.
7. இந்திய ராணுவ தளவாட தொழிற்சாலைகள் workmen நாட்டின் வருங்கால வைப்பு நிதி.
8. இந்திய கடற்படை கப்பல் பட்டறை workmen நாட்டின் வருங்கால வைப்பு நிதி.
9. பாதுகாப்பு சேவைகள் அதிகாரிகள் சேம நல நிதியம்.
10. ஆயுதப்படைகள் பணியாளர் வருங்கால வைப்பு நிதி.
திருப்பூர் மாவட்டம், குடிமங்கலம் ஒன்றிய தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் புதிய கிளை துவக்க விழா 11.04.2013 ( வியாழன்) அன்று காலை 10.00 மணி அளவில் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் G. தனபால் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் P.பேட்ரிக் ரெய்மாண்ட், TNGTF ன் புதிய கிளையை துவங்கி வைத்து உரையாற்றினார்.
வாழ்த்துரை வழங்கும் மாநில துணைப்பொதுச் செயலாளர் S. முகமது அயூப்
வாழ்த்துரை வழங்கும் மாநில மகளிரணிச் செயலாளர் D.ஜேனட் பொற்செல்வி,
வாழ்த்துரை வழங்கும் திருப்பூர் மாவட்ட பொருளாளர் V.விநாயகமூர்த்தி,
மேலும் வெள்ளகோவில் ஒன்றிய செயலாளர் P.விஸ்வநாதன், வெள்ளகோவில் ஒன்றிய பொருளாளர் R. ஜெயக்குமார், பல்லடம் ஒன்றிய செயலாளர் V. பரமசிவம் விழாவில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
விழாவில் குடிமங்கலம் ஒன்றிய தலைவராக G.மோகன்ராஜ், செயலாளராக B.தியாகராஜன், பொருளாளராக R.நாராயணசாமி, மகளிரணிச் செயலாளராக G. சாந்தி, இணைச் செயலாளராக K.அலாவுதீன், துணைத்தலைவராக K. வசந்தா ஆகியோர் தேர்தெடுக்கப்பட்டனர்
16.4.13
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)