'டெட் தேர்வில், வினாத்தாள் வெளியாகாமல், மாணவர்கள், 'காப்பி' அடிக்காமல், கண்காணிக்க வேண்டும்' என, இயக்குனர்கள் மற்றும் முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
அங்கீகார விதிகளை மீறி, தில்லுமுல்லு செய்த 13 பள்ளிகளை, சி.பி.எஸ்.இ., கண்டுபிடித்துள்ளது. தமிழகத்தில், ஒரு பள்ளி சிக்கியுள்ளது. சி.பி.எஸ்.இ., அங்கீகாரம் பெற்று, தமிழகத்தில், ௬௬௦ பள்ளிகள் உட்பட, நாடு முழுவதும், 18 ஆயிரம் பள்ளிகள் செயல்படுகின்றன.
அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு, இன்று தேர்வுகள் முடிந்து, நாளை முதல் கோடை விடுமுறை விடப்படுகிறது. சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு, ஏப்., 28ல், புதிய கல்வி ஆண்டுக்கான கோடை வகுப்புகள்
மே மாதம் 1ம் தேதி முதல் இன்ஜினியரிங் படிப்பிற்கான விண்ணப்பம் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என உயர் கல்வி அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அரசு பல்கலைகள், கல்லுாரிகளில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியிட நியமனங்களுக்கு திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளது.இதனால் துணைவேந்தர்கள், புதிதாக துணைவேந்தர் பதவிகளை கைப்பற்ற முயற்சிப்பவர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., மூலம், இந்த ஆண்டு, 6,390 பேர் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். டி.ஆர்.பி.,யின் ஆண்டு தேர்வு திட்டத்தை, பள்ளிக் கல்வி அமைச்சர்,
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் பார்த்திபன், கரூரில் அளித்த பேட்டி : ஊதிய உயர்வு தொடர்பாக, நேரடியான பேச்சு நடத்த வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து,
மத்திய அரசுக்கு எதிராக, ஆசிரியர் சங்கத்தினர், இன்று போராட்டம் நடத்துகின்றனர். ஆளுங்கட்சி பின்னணியில், இந்த போராட்டம் நடப்பதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில், மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு, 'நீட்' தேர்வு கட்டாயம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பள்ளிக்கல்வி மற்றும் சுகாதாரத் துறைகள், அரசு பள்ளி மாணவர்களுக்கு, இன்னும் பயிற்சி அளிக்காமல், மெத்தனமாக உள்ளன.
உதவி பேராசிரியர் பணிக்கான, 'செட்' நுழைவு தேர்வு, வரும், 23ல் நடக்கிறது. இதில், 60 மையங்களில், 60 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர். கல்லுாரிகளில் உதவி பேராசிரியர் பணியில் சேர, தேசிய அளவிலான, 'நெட்' அல்லது மாநில அளவிலான, 'செட்' தேர்வில், முதுநிலை
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகும் முன்னரே, தனியார் பள்ளிகளில், பிளஸ் 1 மாணவர் சேர்க்கை முடிக்கப்பட்டு உள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தம், கடந்த வாரம் முடிந்தது; மே, 19ல் முடிவுகள் வெளியாகின்றன.
மத்திய பல்கலையில் சேருவதற்கான, 'கியூசெட்' நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க, நாளை கடைசி நாள். மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் நேரடி கட்டுப்பாட்டில், மத்திய பல்கலைகள் செயல்படுகின்றன. தமிழகத்தில், தஞ்சாவூரில் மத்திய பல்கலை செயல்படுகிறது.
''புதிய கல்விக் கொள்கையை இறுதி செய்வதற்கான நிபுணர் குழு நியமிக்கப்பட்டு, விரைவில் கல்விக் கொள்கை அறிவிக்கப்படும்,'' என, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார்.
'மாணவர்கள் சேர்க்கையில், இட ஒதுக்கீடு விதிகளை மீறும், தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்' என, பள்ளிக் கல்வி இயக்குனர், கண்ணப்பன் எச்சரித்துள்ளார்.
உள்ளாட்சி தேர்தல் குறித்து, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க, மாநில தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. கடந்த, 2016 அக்டோபரில், இரு கட்டமாக நடக்க இருந்த உள்ளாட்சி தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
தனியார் பள்ளிகளுக்கு, புதிய கல்வி ஆண்டுக்கான, கல்விக் கட்டணம் நிர்ணயிப்பது தொடர்பாக, வரும், 17 முதல் விசாரணை துவங்க உள்ளது. தமிழகத்தில், 57 ஆயிரம் பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில், நர்சரி, மெட்ரிக் வகைகளில், 11 ஆயிரத்து, 980 பள்ளிகள் உள்ளன.
தனியார் பள்ளி ஆசிரியர்கள் புறக்கணிப்பால், பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி தாமதமாகி உள்ளது.பிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தம், ஏப்., 5ல் துவங்கியது; 9.33 லட்சம் மாணவ, மாணவியரின் விடைத்தாள்கள் திருத்தப்படுகின்றன. முக்கிய பாடங்களின் விடைத்தாள் திருத்தும் பணி, இறுதி கட்டத்தில் உள்ளது.
'அரசு துறைகளில் காலியாகவுள்ள, 1,609 தட்டச்சர் பணியிடங்களை நிரப்ப, வரும், 26 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.