லேபிள்கள்

21.4.17

பள்ளிகளுக்கு நாளை முதல் கோடை விடுமுறை

 ஆண்டு இறுதி தேர்வுகள் இன்று முடிந்து, தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு, நாளை(ஏப்.,22) முதல் விடுமுறை விடப்படுகிறது. 


பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, மார்ச், 31ல் தேர்வுகள் முடிந்தன. பள்ளிக்கல்வி கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளுக்கு இன்றும்; தொடக்க பள்ளிகளுக்கு, ஏப்., 29ம் தேதியும், தேர்வுகள் முடிவதாகவும் இருந்தது. ஆனால், கோடை வெயில் தாக்கத்தால், சிறு குழந்தைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதால், முன்கூட்டியே விடுமுறை விட பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர். 

இதுகுறித்து, 'அனைத்து பள்ளிகளுக்கும், ஏப்., 21க்கு பின் விடுமுறை விடப்படும்' என, பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார். அதன் படி, இன்று அனைத்து பள்ளிகளிலும் தேர்வு முடிகிறது. நாளை முதல் கோடை விடுமுறை துவங்குகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக