தமிழகத்தில், மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு, 'நீட்' தேர்வு கட்டாயம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பள்ளிக்கல்வி மற்றும் சுகாதாரத் துறைகள், அரசு பள்ளி மாணவர்களுக்கு, இன்னும் பயிற்சி அளிக்காமல், மெத்தனமாக உள்ளன.
உச்ச நீதிமன்றம் : மருத்துவ படிப்புகளான எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில் சேர, 'நீட்' நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என, உச்ச நீதிமன்றம் அறிவித்திருந்தது. இதில், விலக்கு கேட்டு, தமிழக சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆனால், மத்திய சுகாதார துறை ஒப்புதல் தரவில்லை.
இந்நிலையில், தமிழக மாணவர்களுக்கும், 'நீட்' கட்டாயம் என, சென்னை வந்திருந்த, மத்திய சுகாதார அமைச்சர், ஜே.பி.நட்டா திட்டவட்டமாக தெரிவித்தார். ஆனால், பள்ளிக் கல்வித் துறையும், சுகாதாரத் துறையும், இன்னும் மெத்தனமாகவே உள்ளன.பிளஸ் 2 முடிக்கும் மாணவர்களுக்கு, வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடத்தும் நிலையில், 'நீட்' தேர்வு கட்டாயம் என்பதை, பள்ளிக்கல்வித்துறை உறுதியாக கூறவில்லை.
சுகாதார துறை : அதேபோல், 'நீட்' தேர்வுக்கும், மருத்துவ மாணவர் சேர்க்கைக்கும் பொறுப்பேற்றுள்ள சுகாதாரத் துறை சார்பிலும், தமிழக மாணவர்களுக்கு, எந்த விளக்கமும்
அளிக்கப்படவில்லை. அதனால், அரசு பள்ளி மாணவர்களும், கிராமப்புற தனியார் பள்ளி மாணவர்களும், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அமைச்சர்கள், அதிகாரிகளின் பேச்சை நம்பி, பல மாணவர்கள், 'நீட்' தேர்வுக்கு விண்ணப்பிக்கவே இல்லை. அதனால், என்ன செய்வதென தெரியாமல் தவிக்கின்றனர்.கடைசி நேரத்தில் விண்ணப்பித்த மாணவர்களுக்கும், தேர்வை எதிர்கொள்ள பயிற்சி அளிக்கப்படவில்லை. அதனால், வரும் கல்வி ஆண்டில், தமிழக மாணவர்களின் உயர்கல்வி கேள்விக்குறியாகி உள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக