லேபிள்கள்

19.4.17

மே-1ம் தேதிமுதல் இணையதளத்தில் இன்ஜினியரிங் விண்ணப்பம்: அமைச்சர்

மே மாதம் 1ம் தேதி முதல் இன்ஜினியரிங் படிப்பிற்கான விண்ணப்பம் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என உயர் கல்வி அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார். 


சென்னை அண்ணா பல்கலை.யில் இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: 

மே மாதம்1-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை இன்ஜினியரிங் படிப்பிற்கான விண்ணப்பத்தை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை ஜூன் மாதம் 3-ம் ஆன் லைனில் சமர்ப்பிக்க வேண்டும். ஜூன் 20-ம் தேதி இன்ஜினியரிங் படிப்பிற்கான ரேண்டம் எண் வழங்கப்படும். ஜூன் 22-ம் தேதி தரவரிசைப்பட்டியல் வெளியிடப்படும். மருத்துவ கலந்தாய்வுக்கு ஏற்ப ஜூன் 27-ம் தேதிஇன்ஜினியரிங் படிப்பிற்கு கலந்தாய்வு நடத்தப்படும் என கூறினார். தொடர்ந்து பேசிய அவர் தமிழகத்தில் நீட் தேர்வு நடக்காது என எதிர்பார்ப்பதாகவும் கூறினார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக