லேபிள்கள்

21.4.17

ஊழியர் நலனில் அக்கறையில்லாத அரசு : அரசு ஊழியர் சங்கம் காட்டம்

''தற்போதைய தமிழக அரசு, ஊழியர்களின் நலனில் அக்கறை செலுத்தவில்லை,'' என, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் சுப்பிரமணியன் குற்றம் சாட்டினார்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வது உட்பட, 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் ஏப்., 25 முதல், காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். 

இதுகுறித்து, மதுரை கலெக்டர் அலுவலக ஊழியர்கள் மத்தியில் ஆதரவு திரட்டிய சுப்பிரமணியன் கூறியதாவது: காலவரையற்ற வேலை நிறுத்தம் குறித்து, மார்ச்சில் அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி விட்டோம். இதுவரை சங்க நிர்வாகிகளை அழைத்து அரசு பேசவில்லை. இடைக்கால நிவாரணம் குறித்து புதிய ஆய்வு அறிக்கை வெளியிட வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலமுறை சம்பளம் வழங்குவதும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. தற்போதைய அரசு ஊழியர்களின் நலனில் அக்கறை செலுத்த தேவையில்லை. எனவே 61 துறை ஊழியர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் உள்ளாட்சி தேர்தல் உட்பட பல்வேறு பணிகள் பாதிக்கப்படும். மறைந்த முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் 110 விதியின் கீழ், அறிவித்தவைகளை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும், என்றார். மாவட்ட செயலர் கிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக