விரல் ரேகை பதிவாகாத முதியோர், சிறுவர்களுக்கும் உடனடியாக ஆதார் அட்டை கிடைக்கும் வகையில், 'சாப்ட்வேரில்' மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அரசின் மானிய திட்டங்களுக்கு, ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதனால், ஆதார் அட்டை எடுக்க கலெக்டர், தாலுகா அலுவலக நிரந்தர மையங்களில் தினமும்கூட்டம் அலை மோதுகிறது.இதில் சிறுவர்கள், முதியோர், மாற்றுத் திறனாளிகளின் விரல் ரேகைகளை பதிவு செய்ய முடிவதில்லை. இதனால், அவர்களது விண்ணப்பங்கள் நிராகரிக்கப் பட்டன.
இதையடுத்து, விரல் ரேகை பதியாதோருக்கு, கருவிழிகளை மட்டும் எடுத்து அனுப்ப உத்தரவிடப்பட்டது. அதன்படி, கருவிழிகளை எடுத்து அனுப்பினாலும், ஆதார் அட்டை நிராகரிக்கப்படுகிறது. இதனால், பாதிக்கப்பட்டோர், கலெக்டர், தாலுகா அலுவலகங்களுக்கு அலைந்து வந்தனர்.
தற்போது, விரல் ரேகை பதிவாகா விட்டாலும், கருவிழி பதிவை வைத்து ஆதார் அட்டை வழங்கும் வகையில், 'சாப்ட்வேரில்' மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. ஏப்ரல் இறுதி வாரத்தில் இருந்து விரல் ரேகை பதிவாகாதோருக்கும் பதிவுகள் மேற்கொள்ளப்பட உள்ளன. வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பதிவு செய்த ஒரு வாரத்திற்குள் ஆதார் அட்டையை, 'ஆன்லைனில்' பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்' என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக