லேபிள்கள்

18.7.16

இன்று நடைபெறுவதாக இருந்த மருத்துவ கலந்தாய்வு ஒத்திவைப்பு

தமிழகத்தில் இன்று நடைபெறுவதாக இருந்த, மருத்துவ படிப்புக்கான இரண்டாம்கட்ட கலந்தாய்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வு, சென்னையில், ஜூன், 21 முதல், 25ம் தேதி வரை நடந்தது.

இதில், அரசு மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள அனைத்து இடங்களும் நிரம்பின. அரசு பல் மருத்துவ கல்லுாரியில், 85 இடங்களில், 78 இடங்கள் நிரம்பின.மீதமுள்ள, ஏழு இடங்கள், சுய நிதி கல்லுாரிகளில், 72 எம்.பி.பி.எஸ்., 970 பி.டி.எஸ்., இடங்கள் காலியாக உள்ளன. இரண்டாம் கட்ட கலந்தாய்வை, இன்று நடத்த மருத்துவக்கல்வி இயக்ககம் தீர்மானித்து இருந்தது. திடீரென அது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.இது குறித்து மருத்துவ கல்வி இயக்கக அதிகாரிகள் கூறியதாவது:மருத்துவ படிப்புக்கான தேசிய பொது நுழைவு தேர்வான, 'நீட்' ஜூலை, 24ல் நடக்க உள்ளது. அதன் முடிவுகள்,ஆக., 12ல் வெளியானபின், அகில இந்திய ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை நடக்கும். 

அதில் நிரம்பாத இடங்கள், மாநிலத்திற்கு திரும்பும். அந்த இடங்கள், ஒதுக்கீடு பெற்ற மாணவர்கள் சேராத இடங்களையும் சேர்த்து, இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்தப்படும்.இதுபற்றிய அறிவிப்பு, www.tnhealth.org என்ற இணைய தளத்தில் வெளியிடப்படும். ஆக., இறுதியில் கலந்தாய்வு நடக்க வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக