இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., - பி.ஆர்க்., படிப்புகளில், கவுன்சிலிங் மூலம் மாணவர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.
மொத்தம் உள்ள, 524 கல்லுாரிகளில், தி.மு.க., முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரிக்கு சொந்தமான, மதுரை தயா கல்லுாரிக்கு மட்டும், கவுன்சிலிங்கில் சேர அனுமதி இல்லை. மீதமுள்ள, 523 கல்லுாரிகளில், 2.82 லட்சம் இடங்களில் மாணவர்களை சேர்க்க, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் அளித்தது. இதில், கவுன்சிலிங் மூலம் மாணவர்களை சேர்க்க, 1.92 லட்சம் இடங்கள் ஒதுக்கப்பட்டன. இதன்படி, 23ம் தேதி விளையாட்டுப் பிரிவுக்கும், 24ம் தேதி மாற்றுத் திறனாளிகளுக்கும் கவுன்சிலிங் நடந்தது. 27ம் தேதி பொது கவுன்சிலிங் துவங்கியது; நாளைமுடிகிறது. இந்நிலையில், இன்ஜினியரிங் கல்லுாரிகளில், காலியிடங்களின் எண்ணிக்கை, ஒரு லட்சத்தை தாண்டும் என, தெரிகிறது. காரணம், 200க்கும் மேற்பட்ட கல்லுாரிகளில், நிர்வாக ஒதுக்கீட்டில் உள்ள, 77 ஆயிரம் இடங்களில், 50 சதவீதம் கூட நிரம்பவில்லை. எனவே, இக்கல்லுாரிகளும், கவுன்சிலிங்கில் பங்கேற்காத நிகர்நிலை பல்கலைகளும், பல்வேறு கவர்ச்சி அறிவிப்புகள் மூலம், மாணவர் சேர்க்கையில் இறங்கி உள்ளன. மாணவர்களுக்கான பஸ் கட்டணம், 30 ஆயிரம் ரூபாய்ரத்து; விடுதி வாடகையில் சலுகை; நன்கொடை ரத்து; இலவச 'வை - பை' வசதி; தொழிற்கூடங்களில் நேரடி சிறப்பு பயிற்சி; 'அரியர்' வைக்காத மாணவருக்கு, கல்வி கட்டண குறைப்பு என, பல சலுகைகளை வாரி வழங்கி வருகின்றன.சில கல்லுாரிகள், மொபைல் போன் நிறுவனங்களில் இருந்து எண்களை பெற்று, பெற்றோருக்கு நேரடியாக தகவல்களை அனுப்பி வருகின்றன. மற்ற கல்லுாரிகள், 'வாட்ஸ் ஆப், இன்ஸ்டாக்ராம், பேஸ்புக்' மூலம் மாணவர் சேர்க்கையை தீவிரப்படுத்தியுள்ளன. இதுகுறித்து, உயர் கல்வித் துறையினர் கூறுகையில், 'முதல் ஆண்டுக்கு மட்டுமே இச்சலுகைகள் கிடைக்கும். அடுத்தடுத்த ஆண்டுகளில், பல கல்லுாரிகள், கூடுதல் கட்டண வசூலில் ஈடுபடலாம்' என்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக