லேபிள்கள்

24.11.13

இன்று (24.11.13) நடைபெற்ற திருப்பூர் மாவட்ட தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்;

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் திருப்பூர் மாவட்ட செயற்குழு கூட்டம் இன்று (24.11.13) காலை 10.00 மணி அளவில் ஊ.ஒ.ந.நி.பள்ளி, பல்லடம் மேற்கு பள்ளியில் நடைபெற்றது.

        கூட்டத்திற்கு மாநில துணைப் பொதுச் செயலாளர் திரு. S.முகமது அயூப் தலைமை தாங்கினார். மாவட்டப் தலைவர் திருமதி.K. இந்திராணி, மாவட்டப் பொருளாளர் திரு.V.விநாயகமூர்த்தி ஆகியோர்  முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் திரு.G.தனபால் வரவேற்புரை நிகழ்த்தினார். கூட்டத்தில் திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு வட்டாரங்களில் இருந்து பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

     கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

1.   நடுநிலைப்பள்ளிகளில் நியமிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு துறை வேறுபாடு கருதாமல் முதுகலை பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு வழங்க வேண்டும். இது தொடர்பான உயர்நீதி மன்றத்தில் நடைபெறும் வழக்கிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மாநில அமைப்பிற்கு செய்வது.

2.   நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும்

3.   புதிய பங்களிப்பு ஒய்வூதியத்திட்டத்தை கைவிட்டு பழைய ஒய்வூதியத்திட்டத்தை தொடர அரசை கேட்டுக்கொள்வது.

4.   தொகுப்பூதிய பணிக்காலத்தை, முறையான பணிக்காலமாக அறிவிக்க கொருவது.

5.   அமைப்பின் சார்பில் பல்வேறு மாவட்டங்களில் நடைபெறும் கவன ஈர்ப்பு உண்ணாவிரதங்களில் தவறாது கலந்து கொண்டு மாநில அமைப்பிற்கு வலு சேர்த்திடவேண்டும்.

6.   மாவட்டத்தில் புதிய ஒன்றியக்கிளை துவக்குவது, ஏற்கனவே உள்ள வட்டாரக்கிளைகளை சிறப்பாக வழிநடத்திச் செல்வது


7.   வெள்ளகோவில் ஒன்றியம் சார்பாக பராமரிக்கப்படும் tngtfvkl என்ற முகநூல் கணக்கை திருப்பூர் மாவட்ட முகநூல் கணக்காக மாற்றி அதில் வெளியிடப்படும் செய்திகள் பராமரிக்கும் பொருட்டு அவ்வொன்றிய பொருளாளரை செய்தி தொடர்பாளராக அங்கீகரித்து மாவட்ட, மாநில செய்திகளை தொடர்ந்து பதிவேற்றிடவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது.


அடுத்த செயற்குழு கூட்டம் டிசம்பர் 2014 ல் வெள்ளகோவிலில் நடத்த செயற்குழு தீர்மானத்துள்ளது

3 கருத்துகள்:

  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  2. அடுத்த செயற்குழு கூட்டம் டிசம்பர் 2013 ல் வெள்ளகோவிலில் நடத்த செயற்குழு தீர்மானத்துள்ளது

    பதிலளிநீக்கு