பள்ளிக்கல்வித் துறையின் கீழ் உள்ள அரசு உதவிபெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 499 ஆசிரியர்களை நீக்கம் செய்து அண்மையில் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது.
இதையடுத்து பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவை எதிர்த்து
மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கை
விசாரித்த உயர்நீதிமன்றம் பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவிற்கு தடை விதித்து உத்தரவிட்டது. மேலும் பள்ளிக்கல்வி இயக்குநருக்கு இதுகுறித்த பதிலளிக்க உத்தரவிட்டது. இதையடுத்து இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பள்ளிக்கல்வி இயக்குநர் தாக்கல் செய்த பதில் மனுவில் 499 ஆசிரியர்கள் நீக்கம் தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளவில்லை எனவும், இதுகுறித்த அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக