லேபிள்கள்

29.11.13

இடைநிற்றல் மாணவர்களை பள்ளியில் சேர்க்க சிறப்பு கவனம்

தமிழகத்தில் இடைநிற்றல் மாணவர்களை, பள்ளிகளில் மீண்டும் சேர்க்க, அனைவருக்கும் கல்வித் திட்ட (எஸ்.எஸ்..,) முதன்மை கல்வி அலுவலர்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்,'' என, அத்திட்ட இணை இயக்குனர் நாகராஜ முருகன் வலியுறுத்தினார்.
மதுரையில், 9 மாவட்ட அனைவருக்கும் கல்வித் திட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. முதன்மை கல்வி அலுவலர் (மதுரை) பார்வதி முன்னிலை வகித்தார். நாகராஜ முருகன் பேசியதாவது: மாநிலம் முழுவதும் மாணவர்களின் வாசிப்பு மற்றும் எழுத்துத் திறனை மேம்படுத்தும் பணியில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்

இடைநிற்றல் மாணவர்கள் விவரம் கண்டறிந்து, அவர்களை மீண்டும் பள்ளிகளில் சேர்க்க முதன்மை கல்வி அலுவலர்கள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம் பாடங்களில் மாணவர்களின் அடைவுதிறனை மேம்படுத்த கலந்தாய்வுக் கூட்டங்கள் நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

கூட்டத்தில், எஸ்.எஸ்.., திட்ட ஆசிரியர்கள் சம்பளம், காலிப் பணியிடங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன. மாநில திட்ட ஆலோசகர் சபரிநாதன், சி...,க்கள் ராஜேந்திரன் (தேனி), சகுந்தலா (ராமநாதபுரம்), கணேசமூர்த்தி (சிவகங்கை) சுவாமிநாதன் (விருதுநகர்), சரோஜா (தூத்துக்குடி), கஸ்தூரிபாய் (நெல்லை), முருகன் (கன்னியாகுமரி), கலாவள்ளி (பெரம்பலூர்) ஆகியோர் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக