பல்லடம்; தலைமையாசிரியர் பதவி உயர்வு பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்க
வேண்டும் என்று தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அரசுக்கு கோரிக்கை
விடுத்துள்ளது.
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் திருப்பூர்
மாவட்டச் செயற்குழு கூட்டம் பல்லடம் மேற்கு நடுநிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை
நடைபெற்றது. கூட்டத்திற்கு, மாநில துணைப் பொதுச் செயலாளர் முகமது அயூப் தலைமை
வகித்தார். மாவட்டத் தலைவர் இந்திராணி, பொருளாளர் விநாயகமூர்த்தி ஆகியோர் முன்னிலை
வகித்தனர். செயலாளர் தனபால் வரவேற்றார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
நடுநிலைப்பள்ளிகளில் நியமிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு
துறை வேறுபாடு கருதாமல் முதுநிலை பட்டதாரி ஆசிரிய பதவி உயர்வு வழங்க வேண்டும்,
நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு, பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டும்
வழங்க வேண்டும், புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய
திட்டத்தை அரசு தொடர வேண்டும், தொகுப்பூதிய பணிக்காலத்தை பணிக்காலமாக அறிவிக்க
வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நன்றி; தினமணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக