புதுச்சேரியை அடுத்த
அரும்பார்த்தபுரத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 500-க்கும்
மேற்பட்ட மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். இந்நிலையில் 2 நாள்களுக்கு முன்பு
இப் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்கள் சிலர் மாணவிகளுக்கு கணினியில் ஆபாசப் படங்களைக்
பார்க்குமாறு வற்புறுத்தினராம்.
இது தொடர்பாக மாணவிகள் பெற்றோரிடம்
புகார் கூறினர். இதையடுத்து மாணவிகளின் பெற்றோர் பள்ளி முன்பு புதன்கிழமை
முற்றுகைப் போராட்டம் நடத்தி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.
இதைத்தொடர்ந்து பள்ளிக் கல்வித் துறை
இயக்குநர் இ.வல்லவன், முதன்மைக் கல்வி அலுவலர் கலைச்செல்வன் உள்ளிட்டோர்
போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆசிரியர்கள் மீது உரிய
நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறியதால் பெற்றோர் கலைந்து சென்றனர்.
இதையடுத்து 3 ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அவர்கள் மீது துறை
ரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
4 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்: இந்நிலையில்
கல்வித் துறை இயக்குநர் வல்லவன் அரும்பார்த்தபுரம் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அப்துல்
மாலிக், ரஷீத் முகமது, அன்பரசன், சிவக்குமார்
உள்ளிட்ட 4 ஆசிரியர்களை சஸ்பெண்ட்
செய்து வியாழக்கிழமை
உத்தரவிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக