பிளஸ் 2 தனித்தேர்வு விடைத்தாள் நகலை
தேர்வர்கள் வியாழக்கிழமை (நவம்பர் 28) முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என
அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. கடந்த மாதம் நடைபெற்ற பிளஸ் 2
தனித்தேர்வில் விடைத்தாள் நகலைக் கோரி ஏராளமான மாணவர்கள் விண்ணப்பித்தனர்.
இவர்களது
விடைத்தாள் நகல்கள் examsonline.co.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
மாணவர்கள் தங்களது பதிவெண், பிறந்த தேதி மற்றும் அக்டோபர் 2013 தனித்தேர்வு
மதிப்பெண் சான்றிதழில் உள்ள டிஎம்ஆர் கோட் எண் ஆகியவற்றைப் பதிவு செய்து நகலைப்
பதிவிறக்கம் செய்யலாம்.
இந்தத்
தேர்வில் மறுகூட்டல் கோரி ஏற்கெனவே விண்ணப்பித்தவர்களுக்கான முடிவுகள் விரைவில்
அறிவிக்கப்படும். விடைத்தாள் நகல் கோரிய தேர்வர்கள் மட்டும், அதை பதிவிறக்கம்
செய்த பிறகு, மறுமதிப்பீடு அல்லது மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்.
அவ்வாறு
விண்ணப்பிக்க விரும்புவோர் அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் ஜ்ஜ்ஜ்.ற்ய்க்ஞ்ங்.ண்ய்
என்ற இணையதள முகவரியில் நவம்பர் 28 முதல் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம்
செய்துகொள்ளலாம். இந்த விண்ணப்பத்தைப் பூர்த்திசெய்து கட்டணத்துடன் சம்பந்தப்பட்ட
முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் டிசம்பர் 2, 3 தேதிகளில் மட்டும் நேரில்
செலுத்த வேண்டும் என்று அரசுத் தேர்வு இயக்ககம் அறிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக