லேபிள்கள்

29.11.13

குரூப் 2 தேர்வு பணிக்காக நவ.30-இல் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் குரூப் 2 தேர்வு வருகிற ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளதையொட்டி மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் சனிக்கிழமை விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: குரூப் 2 தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகள் செய்ய வேண்டியுள்ளதால் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும், சுயநிதி மற்றும் மெட்ரிக் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு வருகிற சனிக்கிழமை (நவ.30) விடுமுறை அளிக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளு.


எனவே, அன்றைய தினம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக