தமிழ் பண்டிட் என அழைக்கப்பட்ட தமிழாசிரியர்கள், பட்டதாரி தமிழாசிரியர்கள் என்றே அழைக்கப்படுவர் என, அரசு உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளில், 1988ல் உதவி ஆசிரியர்களாக நியமிக்கப்பட்ட தமிழாசிரியர்கள்,
2000ல் பட்டதாரி தமிழாசிரியர்கள் என, அழைக்கப்பட்டனர். இந்நிலையில், கடந்த ஏப்ரல் அரசாணை, 263ன் படி தமிழாசிரியர்கள், தமிழ் பண்டிட் என, அழைக்கப்படுவர் என, அரசு உத்தரவிட்டது.
ஊதியத்தில் சிக்கல்: தமிழ் பண்டிட் என, அழைக்கப்பட்ட தமிழாசிரியர்களுக்கு தர ஊதியம், 4,400 ரூபாய், பட்டதாரி ஆசிரியர்களுக்கு, 4,600 ரூபாய் என, அரசு நிர்ணயம் செய்தது. தமிழாசிரியர்களாக பணியாற்றுபவர்கள், தமிழ் பண்டிட் என்பதால் தர ஊதியம், 4,600 ரூபாய் பெற்றவர்கள், தணிக்கையின் அடிப்படையில் கூடுதலாக பெற்ற தொகையை திரும்ப செலுத்த, தலைமையாசிரியர்கள் தமிழாசிரியர்களை வலியுறுத்தினர்.
தமிழக தமிழாசிரியர்கள் கழகம் கோரிக்கை: தமிழாசிரியர்கள் அனைவரும், தமிழ் பண்டிட் என்பதை விடுத்து, பட்டதாரி தமிழாசிரியர்கள் என, அழைக்கப்பட வேண்டும். பட்டதாரிஆசிரியர்கள் பெறும் தர ஊதியம் 4,600, தமிழாசிரியர்களுக்கு வழங்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர். தமிழாசிரியர்களின் கோரிக்கையினை ஏற்று, தமிழ் பண்டிட் என்ற சொல் நீக்கப்பட்டு தமிழ் ஆசிரியர்கள், பட்டதாரி தமிழாசிரியர்கள் என அழைக்கப்படுவர், என்று பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலர் உத்தரவிட்டுள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக