இன்று (28.11.13) திருப்பூர்
மாவட்டம் வெள்ளகோவில் வட்டார தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் கூட்டம்
வட்டார தலைவர் த.பிரதீப்குமார் தலைமையிலும் வட்டார செயலாளர் ப.விஸ்வநாரன்
முன்னிலையிலும் வெள்ளகோவில்
துரைராமசாமி ஆரம்ப பள்ளியில் நடைபெற்றது. வட்டார பொருளாளர்
ரா.ஜெயக்குமார் அனைவரையும் வரவேற்றார், மாவட்ட பொருளாளர் வி.விநாயகமூர்த்தி
சிறப்புரையுடன், வட்டார மகளீர் அணிச்
செயலாளர் சீதாதேவி நன்றியுரையுடனும் இனிதே நடைபெற்றது.
தீர்மானங்கள்;
1. பட்டதாரி ஆசிரியருக்கு மட்டும் நடுநிலைப்பள்ளி
தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கிடைக்கும் படி அரசாணையை தமிழக அரசு வெளியிட வேண்டும்.
2. நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியருக்கும்
பள்ளிக்கல்வியில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியரை போன்றே முதுகலை பட்டதாரி ஆசிரியர்
பதவி உயர்வு வழங்க அரசாணை வெளியிட வேண்டும்.
3. CPS யை விலக்க கோரி மாநில அமைப்பு நடத்தும் கவன
ஈர்ப்பு உண்ணவிரதங்களில் கலந்து கொண்டு அமைப்பை வலிமை படுத்துவது.
4. திருப்பூர் மாவட்ட அடுத்த செயற்குழு கூட்டத்தை
வெள்ளகோவிலில் நடத்த அனுமதித்த மாவட்ட செயற்குழுவிற்கு நன்றியை இக்கூட்டம்
தெரிவித்துக் கொள்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக