சென்னை
ஐகோர்ட்டில் மதுரை
காமராஜர் பல்கலைக்கழக
பேராசிரியர் எஸ்.கிருஷ்ணசாமி
தாக்கல் செய்த
மனுவில் கூறப்பட்டு
இருப்பதாவது:–
பல்கலைக்கழகங்களில்
துணைவேந்தரை தேர்வு
செய்வதற்கு பல்கலைக்கழக
மானியக்குழு (யு.ஜி.சி.)
விதிகளை வகுத்தளித்துள்ளது.
ஆனால் சமீபத்தில்
தமிழகத்தில் அந்த
விதிகள் மீறப்பட்டுள்ளன.
தற்போது
பெரியார் பல்கலைக்கழகம்,
பாரதிதாசன் பல்கலைக்கழகம்,
அழகப்பா பல்கலைக்கழகத்துக்கு
துணைவேந்தர் தேர்வுக்கான
குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த
தேர்வுக்குழு பரிந்துரைத்து
துணை வேந்தர்
பெயர் பட்டியலை
அரசுக்கு அனுப்பும்.
இந்த பட்டியலில்
உள்ளவர்கள், யு.ஜி.சி.
விதியின்படி, தகுதியைப்
பெற்றவராக இருக்க
வேண்டும். தகுதி
இல்லாதவர்கள் இடம்பெற்றால்
அந்த பட்டியலை
ரத்து செய்யப்பட
வேண்டும். யு.ஜி.சி.
விதிகளின்படி துணை
வேந்தர் தேர்வு
நடைபெறுவதை உறுதி
செய்வதற்கு அரசுக்கு
உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு
அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த
மனுவை நீதிபதிகள்
சித்ரா வெங்கட்ராமன்,
டி.எஸ்.சிவஞானம்
ஆகியோர் விசாரித்தனர்.
இந்த மனுவுக்கு
தமிழக உயர்
கல்வித்துறை செயலாளர்
மற்றும் பிரதிவாதிகள்
அடுத்த வாரத்தில்
பதிலளிக்க வேண்டும்
என்று நீதிபதிகள்
உத்தரவிட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக