லேபிள்கள்

29.6.15

70 லட்சம் மாணவ, மாணவியருக்கு ஆதார் அட்டை வழங்க சிறப்பு முகாம்

தமிழகத்தில், 70 லட்சம் மாணவ, மாணவியருக்கு, ஆதார் அட்டை வழங்கும் சிறப்பு முகாம்களை, ஜூலையில் நடத்த மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.
மத்திய அரசு உத்தரவுப்படி, தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளின் மாணவ, மாணவியர் விவரங்கள், 'இ.எம்.ஐ.எஸ்.,' 
என்ற கல்வி மேலாண்மை மற்றும் தகவல் தொடர்பு திட்டத்தில் சேகரிக்கப்படுகின்றன. 

மாணவர்களின் தனிப்பட்ட விவரங்களில், ஆதார் எண்ணையும் இணைக்க உத்தரவிடப்பட்டுஉள்ளது.மேலும், 'பள்ளி மாணவ, மாணவியருக்கு, கண்டிப்பாக ஆதார் எண் உருவாக்க வேண்டும்' என்று, பெங்களூருவில் உள்ள, மத்திய திட்டக்குழுவின், தென் மண்டல துணை இயக்குனரகத்தில் இருந்து, தமிழக பள்ளிக்கல்வித் துறைக்கும்உத்தரவு வந்துள்ளது.இதையடுத்து, பள்ளிக்கல்வித் துறை நடத்திய ஆய்வில், 70 லட்சம் மாணவ, மாணவியருக்கு ஆதார் எண் உருவாக்க வேண்டியுள்ளது தெரியவந்தது. அதனால், புதிய கல்வி ஆண்டில், ஆதார் எண் இல்லாத மாணவர்களுக்கு, ஜூலை முதல் சிறப்பு முகாம்கள்நடத்தப்பட உள்ளன.இதற்கான தகவல் தொடர்பு அதிகாரியாக, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் நியமிக்கப்பட்டு உள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக