லேபிள்கள்

14.9.13

ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்களில் வழக்கு தொடுத்தவர்களுக்கு பணப்பலன்

வழக்கு தொடுத்த 1,528 ஓய்வு பெற்ற தலைமைஆசிரியர்களுக்கு மட்டுமே பணப்பலன் வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


1988 ஜூன் 1க்கு முன், தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு, இடை நிலைஆசிரியர் பணிக்காலத்தையும் சேர்த்து, தலைமை ஆசிரியர் பதவியில், தேர்வுநிலை, சிறப்புநிலை வழங்கப்பட்டது. ஆனால், 1988 ஜூன் 1க்கு, பிறகு, 1995 டிச., 31 வரை, பதவி உயர்வு பெற்றவர்களுக்கு, வழங்கப்படவில்லை.
இதையடுத்து, தமிழக நிர்வாக தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்த, 63 ஓய்வு பெற்ற தலைமைஆசிரியர்களுக்கு மட்டும், இடைநிலை ஆசிரியர் பணிக்காலத்தையும் சேர்த்து, தலைமைஆசிரியர் பதவியில், தேர்வுநிலை, சிறப்புநிலை வழங்க உத்தரவிடப்பட்டது. இதை பின்பற்றி, 1,528 பேர் மீண்டும் வழக்கு தொடுத்தனர். அவர்களுக்கும், வழக்கு தொடுக்காதவர்களுக்கும் இடைநிலை ஆசிரியர் பணிக்காலத்தையும் சேர்த்து, தலைமைஆசிரியர் பதவியில், தேர்வுநிலை, சிறப்புநிலை வழங்கவும், பணப்பலன் வழங்கவும் அரசு உத்தரவிட்டது. இதற்காக, அரசுக்கு பல கோடி ரூபாய் தேவைப்பட்டதால், அரசு உத்தரவை செயல்படுத்துவதில் சிக்கல் நீடித்தது. இந்நிலையில், வழக்கு தொடுத்த 1,528 பேருக்கு மட்டும், தேர்வு நிலை, சிறப்பு நிலை மற்றும் பணப்பலன் வழங்க தமிழகஅரசு உத்தரவிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக