லேபிள்கள்

10.9.13

இ.பி.எப்., வட்டி இந்தாண்டும் 8.5 சதவீதம் அளிக்க முடிவு?

தொழிலாளர் வருங்காக வைப்பு நிதி திட்டத்தில், கணக்கு வைத்துள்ளவர்களுக்கு, நடப்பாண்டில், 8.5 சதவீத வட்டி வழங்க அனுமதியளிக்கப்படும் என தெரிகிறது.தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில், சேர்ந்து கணக்கு வைத்துள்ளவர்களுக்கு, அவர்களின் கணக்கில் சேர்த்துள்ள தொøக்கு, ஏற்ப வட்டி வழங்கப்படுகிறது. கடந்த 2012 - 13ம் ஆண்டுக்கு, 8.5 சதவீத வட்டி வழங்கப்பட்டது. இதற்கு முன், 2011 - 12ல், 8.25 சதவீத வட்டி வழங்கப்பட்டது.



நடப்பு நிதியாண்டில், 8.5 சதவீத வட்டியே தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 8.75 சதவீத வட்டி அளித்தால், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுலகத்திற்கு பற்றாக்குறை ஏற்படும். இதை நிதி அமைச்சகம் ஏற்காது. 8.5 சதவீத வட்டி அளித்தால், தொழிலாளர் வைப்பு நிதி அலுவலகத்திற்கு, கூடுதல் நிதி கையிருப்பு காட்டும்.எனவே, தொழிலாளர் வைப்பு நிதி அலுவலகத்தின், கொள்கை முடிவுகளை எடுக்கும், டிரஸ்ட்டிகளின் மத்திய வாரிய கூட்டம், 23ம் தேதி நடக்கிறது.


இக்கூட்டத்திற்கு, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தலைமை தாங்குகிறார். இக்கூட்டத்தில், டிரஸ்டிகள், நிதி மற்றும் தொழில் முதலீட்டு குழுவை மாற்றியமைக்கின்றனர். இக்குழு தான், வட்டி எவ்வளவு அளிக்க வேண்டும் என டிரஸ்டிகளின் மத்திய வாரியத்திற்கு பரிந்துரை செய்யும். நிதி முதலீட்டு குழு மாற்றியமைக்கப்பட்ட பின், டிரஸ்டிகள் மத்திய வாரிய கூட்டம், தீபாவளிக்கு முதல் நாள், கூடி இறுதி முடிவு எடுக்க இருக்கிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக