வாக்காளர்
பட்டியல் திருத்தம்
குறித்து, ஓட்டுச்சாவடி
மைய பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்க
தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. அக்.,1ல் சட்டசபை தொகுதி வாரியாக வரைவு வாக்காளர்
பட்டியல் வெளியிடப்படுகிறது.
அன்று முதல் அக்.,31 வரை, வாக்காளர் பட்டியலில்
பெயர் சேர்த்தல்,
நீக்கல், திருத்தம்,
முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகள் நடைபெறும்.
இந்த திருத்த பணிகள், அந்தந்த ஓட்டுச்சாவடி மையத்தில் நடக்கிறது.
இதற்காக, ஓட்டுச்சாவடி
மையம் அமைந்துள்ள
பள்ளி தலைமையாசிரியர்களுக்கு திருத்தபணிகள், விண்ணப்பங்கள்,
அடிக்கடி ஏற்படும்
பிழைகள் குறித்து
பயிற்சி வகுப்புகள்
நடத்த தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள்,
இந்த பயிற்சியை
அளிப்பர். அக்.,1ல் வெளியிடப்படும் வாக்காளர்
பட்டியலை, அக்.2, ல் காந்தி ஜெயந்தி அன்று நடைபெறும், சிறப்பு கிராம சபை கூட்டத்தில்,
அந்த கிராமத்தில்
பதிவு செய்த வாக்காளர் பட்டியலை பெயர் வாரியாக பொதுமக்கள் முன்னிலையில்
படித்து, திருத்தம்
செய்யவும் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக