லேபிள்கள்

9.9.14

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முடிவு வெளியீடு: நவம்பரில் பிரதான தேர்வு.

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முடிவுகள் திங்கட்கிழமை வெளியாயின.இதில்,11,497 பேர் பிரதான தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர்.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்
(டிஎன்பிஎஸ்சி), கடந்த 2013, டிச.1ம் தேதி குரூப்-2 தேர்வை நடத்தியது. 
இதில், தொழிலாளர் உதவி ஆய்வா ளர், நிதித்துறையில் உதவிப் பிரிவு அலுவலர், சட்டத்துறை யில் உதவிப் பிரிவு அலுவலர், கைத்தறி ஆய்வாளர், கூட்டு றவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர் உள்பட பல்வேறு துறைகளில் உள்ள 19 பதவிக ளுக்கான 1,047 பணியிடங்களுக்கு நடைபெற்ற முதல்நிலைத் தேர்வை 4,98,471 பேர் எழுதினர். இதற்கான முடிவுகள் திங்கட்கிழமை வெளியிடப் பட்டது. இதில், 11,497 பேர் பிரதான தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

பிரதான தேர்வு வரும் நவ.8ம் தேதி நடைபெறுகிறது. தேர்வு பெற்றவர்கள் பட்டியல், டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.இத்தகவல், டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ஷோபனா வெளியிட்டுள்ளார் 11,497 பேர் பிரதான தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர். பிரதான தேர்வு வரும் நவ.8ம் தேதி நடைபெறுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக