தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையில் காலியாக இருந்த,
49 மாவட்ட கல்வி அலுவலர் (டி.இ.ஓ.,) பணியிடங்களை நிரப்பி, பள்ளிக்கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.
மாநிலம் முழுவதும், மாவட்ட கல்வி அலுவலர் நிலையில், 50க்கும் அதிகமான பணியிடங்கள் காலியாக இருப்பது குறித்தும், இதனால், பள்ளிகளை ஆய்வு செய்வதில், முட்டுக்கட்டை ஏற்பட்டிருப்பது குறித்தும், கடந்த வாரம், 'தினமலர்' நாளிதழில், செய்தி வெளியானது. இந்நிலையில், அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்,
22 பேர், அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், 27 பேர் என, 49 பேரை, மாவட்ட கல்வி அலுவலர்களாக, பதவி உயர்வு செய்து, இயக்குனர் ராமேஸ்வர முருகன்,உத்தரவிட்டார். இந்த பதவி உயர்வால் ஏற்பட்டுள்ள தலைமை ஆசிரியர் காலி பணியிடங்கள், விரைவில் நிரப்பப்படும் எனவும், தரம் உயர்த்தப்படும் பள்ளிகள் பட்டியலும், ஓரிரு நாளில் வெளியாகும் எனவும், கல்வித்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக