ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வில் ‘வெயிட்டேஜ்’ முறையை ரத்து செய்யக்கோரி பட்டதாரி ஆசிரியர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அதன்படி, சென்னை கல்லூரி சாலையில் உள்ள பள்ளி கல்வித்துறை வளாகத்தில் நேற்று காலை பட்டதாரி ஆசிரியர்கள் ஒன்றிணைந்தனர். அவர்கள், பள்ளி கல்வித்துறையை சுடுகாடாக பாவித்து, பட்டதாரி ஆசிரியர்களை பிணக்கோலத்தில் வைத்து போராட்டம் நடத்துவதற்காக வந்தனர்.
இதனை அறிந்த போலீசார் அவர்கள் கொண்டு வந்த வெள்ளைத்துணி மற்றும் மாலை ஆகியவற்றை அவர்களிடம் இருந்து பறித்து சென்றனர். இதனால் அங்கு சற்று பரபரப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து பட்டதாரி ஆசிரியர்கள் பள்ளி கல்வித்துறை வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், மாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை போலீசார் தங்கள் வாகனங்களில் ஏற்றி கோயம்பேட்டில் கொண்டு விட்டனர். தங்களின் போராட்டம் தொடரும் என பட்டதாரி ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக