எட்டு, ஒன்பது, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய அறிவியல் கருத்தரங்கு அக்.,11 ல் பெங்களூருவில் நடக்கிறது. இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள இளையோரிடம் தேசிய
ஒருமைப்பாட்டை வளர்க்கும் விதமாக, இளம் மாணவர்களின் எண்ணங்களை அறிவியலுக்கு பயன்படுத்தவும், விஞ்ஞானத்தில் மாறுபட்ட ஆலோசனைகளை வெளி கொணர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி மத்திய கலாசார அமைச்சகம், தேசிய அறிவியல் அருங்காட்சியக கவுன்சில் ஏற்பாட்டில் தேசிய அறிவியல் கருத்தரங்கு பெங்களூரு விஸ்வேஸ்வரயா இண்டஸ்ரியல் டெக்னாலஜிக்கல் மியூசியத்தில் அக்.,11ல் நடக்கிறது. எதிர்கால விவசாயத்தில் நிலைத்த, நீடித்த வளங்கள் மற்றும் சவால்களுக்கான புத்தாக்கங்கள் என்ற தலைப்பில் எட்டு முதல் பத்தாம் வகுப்பு மாணவர்கள் தங்களின் படைப்புகளில் ஆங்கிலம், இந்தி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட இந்திய மொழிகளில் சமர்ப்பிக்க வேண்டும். படைப்புகளை ஆறு நிமிடங்களில் வாசித்து முடிக்க வேண்டும். மாணவர்களின் படைப்புகளில் இருந்து நடுவர்களின் மூன்று கேள்விகளில் இரண்டிற்கு இரண்டு நிமிடத்தில் பதில் அளிக்க வேண்டும். அறிவியல் சார்ந்த படைப்புகளுக்கு 40 மதிப்பெண், சரளமான பேச்சுக்கு 25 மதிப்பெண், கேள்விகளுக்கு பதில் அளிக்கும் திறனில் எழுத்து தேர்வுக்கு 10 மதிப்பெண், வாய் வழி தேர்வுக்கு 10 மதிப்பெண், படக்காட்சிகளுக்கு விளக்கம் அளிப்பிற்கு 15 மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. மாநிலங்கள், யூனியன் பிரதேச அளவில் முதலிடம் பெறும் மாணவர் தேசிய அறிவியல் கருத்தரங்கிற்கு தகுதி பெறுவர்.வெற்றி பெறுவோருக்கு ஓராண்டுக்கு மாதம் ரூ.2 ஆயிரம், சிறப்பு பரிசாக ஒன்பது பேருக்கு மாதம் ரூ.ஆயிரம் வழங்கப்படும். கருத்தரங்கில் பங்கேற்கும் அனைவருக்கும் புத்தகங்கள், அறிவியல் உபகரணங்கள் வழங்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக