லேபிள்கள்

8.9.14

இன்று எம்.பி.பி.எஸ்., இறுதி கட்ட கலந்தாய்வு

அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள, 64 எம்.பி.பி.எஸ்., இடங்கள், 10 பி.டி.எஸ்., இடங்களுடன், இறுதிக்கட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, இன்று துவங்குகிறது.
தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளுக்கு இரண்டு கட்ட கலந்தாய்வு ஏற்கனவே முடிந்து, முதலாம் ஆண்டு வகுப்புகள் துவங்கி விட்டன.அகில இந்திய ஒதுக்கீட்டில் இருந்து, மாநிலத்திற்கு திருப்பித் தரப்பட்ட இடங்கள், ஒதுக்கீடு பெற்றும் மாணவர்கள் சேராத இடங்கள் என, அரசு கல்லூரிகளில் மட்டும், 64 எம்.பி.பி.எஸ்., இடங்கள், 10 பி.டி.எஸ்., இடங்கள் உள்ளன.சுய நிதி கல்லூரிகளில், அரசு ஒதுக்கீட்டில் மீதமுள்ள, 20க்கும் மேலான, எம்.பி.பி.எஸ்., இடங்கள்; 150க்கும் மேற்பட்ட, பி.டி.எஸ்., இடங்களுக்கும் சேர்த்து, இறுதிக்கட்ட மாணவர் கலந்தாய்வு, சென்னைகீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில், இன்று துவங்கி, 10ம் தேதி வரை நடக்கிறது.ஏற்கனவே ஒதுக்கீடு பெற்றோர், கல்லூரிகளுக்குள் மாறுவதற்கான கலந்தாய்வு இன்றும், அடுத்த இரண்டு நாட்களும், மீதமுள்ள இடங்களுக்கான சேர்க்கை கலந்தாய்வு நடக்கிறது. காத்திருப்போர் பட்டியலில் உள்ள, 800க்கும்மேற்பட்டோர் இதில் பங்கேற்பர் என, தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக