பள்ளி மாணவ மாணவியரின் இ&மெயில் முகவரிகளை சேகரிக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
மாணவ மாணவியர் ஆசிரியர்களின் விபரங்கள் அடங்கிய தகவல் தொகுப்பு கல்வித்துறையால் ஏற்படுத்தப்பட உள்ளது. இதற்காக அனைத்து வகை பள்ளிகளிலும் உள்ள மாணவ மாணவியர் மற்றும் ஆசிரியர், பெற்றோர் உள்ளிட்டோரின் விபரங்கள் ஆன்லைனில் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளது.
இந்தநிலையில் இந்த தகவல் சேகரிப்பில் மாணவர்கள் அல்லது பெற்றோரின் இ&மெயில் முகவரியையும் பதிவு செய்ய வேண்டும் என்று பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள் ளார். இதுதொடர்பான உத்தரவில் அவர் கூறியிருப்பதாவது: அனைத்து வகை பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியரின் எடை, உயரம் மற்றும் பெற்றோரின் செல்போன் எண், பெற்றோர் அல்லது மாணவரின் இ& மெயில் முகவரி ஆகிய விபரங்கள் இஎம்ஐஎஸ் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டியுள்ளதால் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் இந்த விபரங்களை ஆன்லைனில் பதிவு செய்வதற்கு ஏதுவாக வரும் 25ம் தேதிக்குள் உரிய படிவத்தில் சேகரித்து தயார் நிலையில் வைத்திருக்க முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுரைகள் வழங்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக