லேபிள்கள்

7.9.14

சிறந்த பள்ளிகளை தேர்வு செய்ய அதிகாரிகளுக்கு கல்வித்துறை உத்தரவு

மாவட்ட அளவில், சிறந்த பள்ளியை தேர்வு செய்து, விவரம் அனுப்ப, தொடக்கக்கல்வி அதிகாரிகளை, கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில், பள்ளியின் வளர்ச்சி, மாணவர்களின் திறன் மேம்பாடு உள்ளிட்டவற்றை கணக்கில் கொண்டு, சிறந்த பள்ளிகள் தேர்வு
செய்யப்பட்டு, ஆண்டு தோறும் கேடயம், சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்த கல்வியாண்டில், சிறந்த பள்ளியை தேர்வு செய்வது குறித்து, சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அதில், கூறியிருப்பதாவது: மாவட்ட வாரியாக, தொடக்கக்கல்வி அலுவலர், அவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட உதவி தொடக்கக் கல்வி அலுவலர், வட்டார வள மைய மேற்பார்வையாளர், வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர் கொண்ட குழு அமைத்து, பள்ளிகளில் ஆய்வு நடத்த வேண்டும். குறைந்தபட்ச மாணவர் எண்ணிக்கை, தமிழ் மற்றும் ஆங்கில வாசிப்புத்திறன், கணிதத்தில் அடிப்படைத் திறன், செயல்வழிக்கற்றல் மற்றும் படைப்பாற்றல், குடிநீர் வசதி, கழிப்பறை தூய்மை, தேசிய விழாக்களில் மாணவர்களின் ஈடுபாடு, பதிவேடுகள் பராமரித்தல் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து, மதிப்பெண் வழங்க வேண்டும். மாவட்ட அளவில், மூன்ற சிறந்த பள்ளிகளை தேர்வு செய்ய வரும்,10ம் ?ததிக்குள் விவரத்தை, கல்வித்துறைக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு, சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக