லேபிள்கள்

12.9.14

652 கணினி பயிற்றுநர் நியமனத்திற்கானஅரசாணை வெளியீடு.

652  கணினி பயிற்றுநர் நியமனத்திற்கான அரசானை வெளியிடப்பட்டுள்ளது. அரசானை எண் GO MS NO : 130 DATED 05/09/2104 


                    இந்த பணி நியமனம் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, உரிய தகுதி பெற்று வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த, பதிவு மூப்பின்படி வழங்கப்படஉள்ளது. மேலும் இந்த பணி நியமனத்திற்கு உரிய கல்வித்தகுதியுடன் பி.எட். தேர்ச்சி பெற்றுள்ளவர்கள் மட்டுமே பரிசீலிக்கப்படுவார்கள். முன்னதாக இப்பணியிடங்களில் பணிபுரிந்த 652 .கணினி பயிற்றுநர்களுக்கு இந்த பணிநியமனத்தில் எவ்வித முன்னுரிமையும் வழங்கப்படமாட்டாது. 

         மேலும் இனி வரும் காலங்களில் உருவாக்கப்படும் இத்தகைய கணினி ஆசிரியர் பயிற்றுநர் பணியிடங்களை நிரப்புகையில், அரசின் தற்போதைய கொள்கை முடிவின்படி ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் உரிய எழுத்துத் தேர்வு வைத்து மட்டுமே நிரப்பப்படுவர்என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக