லேபிள்கள்

11.9.14

பள்ளிகளில் அடிப்படை வசதிகள் குறித்து ஆசிரிய பயிற்றுனர்கள் ஆய்வு

பள்ளிகளில் அடிப்படை வசதிகள் குறித்து ஆசிரிய பயிற்றுனர்கள் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் 934 துவக்க, 210 நடுநிலை, 113 அரசு உதவிபெறும் பள்ளிகள் உள்ளன. ராமநாதபுரம் கல்வி மாவட்டத்தில் 92, பரமக்குடி கல்வி மாவட்டத்தில் 89 அரசு, அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இவற்றில் கூடுதல் வகுப்பறைகள், கழிப்பறைகள், சுற்றுச்சுவர், மேஜை, நாற்காலி, மின் விசிறி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் ஒவ்வொரு ஆண்டும் கூடுதல் நிதி வழங்கப்படுகிறது.

         நடப்பாண்டில் ரூ.3 கோடி நிதியில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட உள்ளன. இந்நிலையில் பள்ளிகளில் குடிநீர், கழிப்பறை வசதிகள் போதுமானதாக இல்லாமல் மாணவ, மாணவிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பள்ளிகளுக்கு கல்வித்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.

இதன்படி மாவட்டத்தில் உள்ள ஆயிரத்து 431 பள்ளிகளில் ஆசிரியர் பயிற்றுனர்கள் நேரடி ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். பள்ளி பராமரிப்பு மானியத்தில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றாத பள்ளிகளில் பணிகளை விரைந்து முடிக்க தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆய்வறிக்கையின்படி அடிப்படை வசதிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக