லேபிள்கள்

9.9.14

TET பணி நியமனம் பெறாதவர்கள், அடுத்த பணி நியமனத்தில் முன்னுரிமை கோர முடியாது.

ஆசிரியர் தகுதி தேர்வில் (டி..டி.,) தேர்ச்சி பெற்றுஅரசுப் பணிகிடைக்காமல் காத்திருப்போர்அடுத்த பணி நியமனத்தில்,முன்னுரிமை கேட்க முடியாதுமதிப்பெண் அடிப்படையில் தான்,ஆசிரியர் பணி நியமனம் இருக்கும்’ எனஆசிரியர் தேர்வு வாரிய(டி.ஆர்பி.,) வட்டாரம் தெரிவித்தது.
டி..டி., தொடர்பானஅரசின் அறிவிப்புகள் அனைத்தும்மாறி மாறிவருவதால்இந்த விவகாரத்தில்முதல்வர் அவசரப்பட்டுவிட்டதாகவும்தங்களைஅரசு அறிவிப்புகள் குழப்புவதாகவும்தேர்வுஎழுதியவர்கள் கூறுகின்றனர்தேர்வு எழுதிய வர்களின் கேள்விக்கணைகளைச் சமாளிக்க முடியாமல்டி.ஆர்.பி., சிக்கித் தவிக்கிறது.
கடந்த ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில், 27 ஆயிரம் பேரும்,சமீபத்தில்முதல்வர் அறிவித்த, 5 சதவீத மதிப்பெண் சலுகையின்காரணமாக, 47 ஆயிரம் பேரும்தேர்ச்சி பெற்றுள்ளனர். 12 ஆயிரம்இடங்கள் மட் டுமே காலியாக உள்ள நிலையில், 74 ஆயிரம் பேர்,தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பதுபெரும் சிக்கலை உருவாக்கி உள்ளது.ஏனெனில்தேர்ச்சி பெற்ற அனைவரும்அரசு வேலை கிடைக்கும்என்ற நம் பிக்கையில் உள்ளனர்.
தற்போதுள்ள காலி இடங்களுக்குதேர்வு பெறுவோர் போகமீதம்உள்ளவர்களுக்குஅடுத்த பணி நியமனத்தின் போதுமுன்னுரிமைகிடைக்கும் எனதேர்வர்கள்எதிர்பார்த்து இருக்கின்றனர்ஆனால்,இதில் உள்ள குழப்பத்தை நீக்குவதற்குடி.ஆர்.பி., முன்வரவில்லை.
எனினும்இந்த விவகாரம் குறித்துடி.ஆர்.பி., வட்டாரம் கூறியதாவது:கடந்த, 2013 தேர்வில் தேர்ச்சி பெற்றோர், 5 சதவீத மதிப்பெண்சலுகையின் காரணமாக தேர்ச்சி பெற்றோர் ஆகிய இரு தரப்பினரின்மதிப்பெண்களையும் மதிப்பீடு செய்துஇட ஒதுக்கீடு வாரியாகஅதிகமதிப்பெண் பெற்ற விண்ணப்பதாரர் மட்டுமேஆசிரியர் பணிக்கு,தேர்வு செய்யப்படுவர்தேர்வு பெறாதவர்கள்அடுத்த காலிபணியிடங்களை நிரப்பும்போதுமுன்னுரிமை கோர முடியாது.
அடுத்துமீண்டும்டி..டி., தேர்வு நடந்தால்அதில் தேர்ச்சிபெறுபவரின் மதிப்பெண் மற்றும் ஏற்கனேவ, 2013ல் தேர்ச்சி பெற்று,அரசு பணி கிடைக்காமல் காத்திருக்கும் விண்ணப்பதாரருடையமதிப்பெண் ஆகிய இரண்டையும் கலந்துஅதில்அதிக மதிப்பெண்பெறும் விண்ணப்பதாரரேஅரசுப் பள்ளி ஆசிரியர் பணிக்குதேர்வுசெய்யப்படுவார்.
இவ்வாறுடி.ஆர்.பி., வட்டாரம் தெரிவித்தது.

தினமலர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக