எம்.பி.பி.எஸ்., இறுதிக்கட்ட கலந்தாய்வின் முதல் நாளில், 150 மாணவர்கள், கல்லூரிகளுக்குள் இடமாறிக் கொண்டனர். காத்திருப்போருக்கான, மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று
நடக்கிறது. தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புக்கு, இரண்டு கட்ட கலந்தாய்வு முடிந்து, வகுப்புகள் துவங்கி விட்டன. இதிலும், மீதமுள்ள இடங்களுக்கான, மூன்றாம் கட்ட கலந்தாய்வு, சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில், நேற்று துவங்கியது. ஏற்கனவே, ஒதுக்கீடு பெற்ற மாணவர்கள், கல்லூரிக்குள் இடம் மாறும் கலந்தாய்வு நடந்தது. 500க்கும் மேலானோர் குவிந்தனர். இதில், 150 பேர் வரை, கல்லூரிகளுக்குள் இடம் மாறும் ஒதுக்கீடு பெற்றனர். காத்திருக்கும் மாணவர்களுக்கான, சேர்க்கை கலந்தாய்வு இன்றும், நாளையும் நடக்கிறது. அரசு கல்லூரிகளில், 64 எம்.பி.பி.எஸ்., இடங்கள், 10 பி.டி.எஸ்., இடங்கள்; சுய நிதி கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் மீதமுள்ள, 20 எம்.பி.பி.எஸ்., 150 பி.டி.எஸ்., இடங்களும் உள்ளன. இதில், 800 பேர் வரை பங்கேற்பர் என, தெரிகிறது.
பெற்றோர் திடீர் போர்க்கொடி: இட மாறுதலில் அரசு கல்லூரியில் சேர்ந்த மாணவர்களுக்கு, சுயநிதி கல்லூரி ஒன்று, 70 ஆயிரம் ரூபாய் பிடித்தம் செய்து கொண்டதாகவும், அதை பெற்றத் தரவேண்டும் என, சில பெற்றோர் கலந்தாய்வு அறை முன் கூடினர். 'மருத்துவக் கல்வி இயக்குனரிடம் மனு கொடுங்கள்' எனக்கூறி, அவர்களை அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக